மாணவி அமுல்யாவை ஜாமீனில் விட்டால் சுட்டுத் தள்ளுவோம்: ஸ்ரீராமசேனா அமைப்பினர் ஆவேசம்

பல்லாரி: ‘தேச துரோக கோஷங்கள் எழுப்பியவர்களுக்கு  ஜாமீன் வழங்க கூடாது.  அப்படி வழங்கினால் அவர்கள் சிறையில் இருந்து வெளியே வரும்போது நாங்களே  சுட்டு தள்ளுவோம்,’ என்று ஸ்ரீராமசேனா எச்சரித்துள்ளது. கர்நாடகாவில் சமீபத்தில் நடந்த குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தின்போது, அமுல்யா என்ற மாணவி, ‘பாகிஸ்தான் வாழ்க’ என்று கோஷமிட்டதால் கைது செய்யப்பட்டார். அதேபோல், நேற்று முன்தினம் ஆராத்ரா என்ற மாணவி, ‘காஷ்மீர் விடுதலை’ பதாகையை காட்டியதால் கைது செய்யப்பட்டார். இவர்களை கண்டித்து, பல்லாரி மாவட்டம் ஹொசப்பேட்டையில் ஸ்ரீராமசேனா சார்பில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் அமைப்பின்  பிரமுகர் சஞ்சீவமரடி பேசுகையில், ‘‘பெங்களூருபோராட்டத்தில் அமுல்யா என்ற மாணவி, ‘பாகிஸ்தான் வாழ்க’  என்று கோஷம் எழுப்பியதால் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளா்ர். இவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது.  ஜாமீன் வழங்கினால், அவர்கள்சிறையில் இருந்து வெளியே வரும் போது சுட்டு தள்ளுவோம் அல்லது சுட்டு தள்ளுபவர்களுக்கு ரூ.10  லட்சம் பரிசு தரப்படும்,’’ என்றார்.

Related Stories: