கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வெப் தொடர்

சென்னை: கிரிக்கெட் வீரர்கள் தங்கள் வாழ்க்கை, விளையாட்டு அனுபவங்களை விவரிக்கும் இணைய தொடரை கிரிக்பஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘ஸ்பைசி பிட்ச்’ என்ற பெயரில் அறிமுகமாகி உள்ள இந்த தொடரில் ஆர்.அஸ்வின், பூம்ரா, புஜாரா, ஷ்ரேயாஸ் அய்யர், குல்தீப் யாதவ் உட்பட முன்னணி கிரிக்கெட் நட்சரத்திரங்கள் தங்கள் முன்னேற்றத்திற்கு காரணமானவர்கள், சிறந்த வீரர்களாக மாறக் காரணமான உண்மைச் சம்பவங்களை விளக்குகிறார்கள். வீரர்களின் பயிற்சியாளர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் குறித்த காட்சிகளுடன், விறுவிறுப்பான விளையாட்டு காட்சிகளும் இடம் பெறும்.

Advertising
Advertising

இந்த இணைய தொடரில் இதுவரை 20 பாகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ரசிகர்கள் பார்க்க வசதியாக  முதல் பாகம் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இனி ஒவ்வொரு சனிக்கிழமையும் புதிய பாகங்கள் வெளியிடப்படும் என்று கிரிக்பஸ் தெரிவித்துள்ளது.

Related Stories: