மாவட்ட த்ரோபால்: வேலம்மாள் சாம்பியன்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான 4வது த்ரோபால் போட்டி மீஞ்சூரில் உள்ள  தனியார் பள்ளியில் நடைபெற்றது. போட்டியில் மாணவ, மாணவிகள் பிரிவில் தலா 25 அணிகள் பங்கேற்றன.மாணவர்கள் இறுதிப் போட்டியில் வேலம்மாள் வித்யாஸ்ரமம் அணி 15-7, 15-12 என்ற நேர் செட்களில்  மீஞ்சூர்  டிவிஎஸ்ஆர் பள்ளியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. அதுபோல், மாணவிகள் பிரிவில் முகப்பேர் வேலம்மாள் பள்ளி 15-8, 15-6 என்ற நேர் செட்

களில் ஸ்பார்டன் மெட்ரிக் பள்ளியை வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றியது.வெற்றிபெற்ற அணிகளுக்கு தமிழ்நாடு எறிபந்து சங்கத்தின் தலைவர் பாலவிநாயகம், டிவிஎஸ்ஆர் பள்ளி தலைமை ஆசிரியர் டி.ராமமூர்த்தி, கவுன்சிலர் வசுமதி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
Advertising
Advertising

Related Stories: