×

சீனாவில் தாக்கம் குறைய தொடங்கிய நிலையில் ஈரானில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்: பொதுமக்கள் அச்சம்!

ஹிய்ம்: சீனாவில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியுள்ள நிலையில், ஈரானில் 4 பேர் கொரோனா தாக்கி உயிரிழந்துள்ளது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வூகான் நகரில் இருந்து ஈரான் திரும்பிய மாணவர்கள் 14 நாட்கள் தீவிர கண்காணிப்புக்கு பிறகு வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டு வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதற்கிடையில் ஈரான் நாட்டின் ஹிய்ம் நகரத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இரு்ப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே உயிர்கொல்லி கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவுவதற்கு முன்பாக உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பரவிய தொடங்கியது முதல் அங்கு வசித்து வந்த வெளிநாடுகளை சேர்ந்தவர்களை அந்தந்த நாடுகள் விமானம் மூலம் தங்கள் நாட்டிற்கு அழைத்து செல்கின்றன. அவ்வாறு அழைத்து செல்லப்படும் நபர்களில் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சீனாவில், கொரோனா வைரஸ் பரவுவது குறைந்தாலும் உயிர்பலி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 2,305 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 76,288 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Iran ,China , China, Iran, coronavirus, deaths
× RELATED ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில்...