×

இந்தியாவிற்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியிடம் காஷ்மீர், குடியுரிமை பிரச்சனை குறித்து கேள்வி எழுப்ப திட்டம்

டெல்லி : நாளை மறுநாள் இந்தியாவிற்கு வருகை தரும் டொனால்ட் ட்ரம்ப் குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து கேள்வி எழுப்புவார் என தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் பொறுப்பை மீண்டும் ஏற்ற போது, நாட்டு மக்களிடம் பேசிய மோடி, சிறுபான்மையின மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று உரிமை அளித்திருந்தார். இவரது பேச்சுக்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து பறிப்பு, இஸ்லாமியர்களின் குடியுரிமையை பறிக்கும் வகையில் சிஏஏ, என்ஆர்சி என அடுத்தடுத்து பிரதமர் மோடி எடுத்து வரும் நடவடிக்கையால் அமெரிக்கா கவலை அடைந்தது. இது பற்றி அவ்வப்போது இந்தியாவிடம் மனக்குமுறலை அமெரிக்கா பகிர்ந்து வந்தது. இந்நிலையில் இந்தியா வரும் அதிபர் ட்ரம்ப், காஷ்மீர் மற்றும் குடியுரிமை பிரச்சனையை எழுப்புவார் என்று நம்பப்படுகிறது. மேலும் காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண சம்பந்தப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே காஷ்மீர் குறித்து கருத்து தெரிவித்து இருந்த மலேசியா, துருக்கி நாடுகளுக்கு இந்தியா தனது கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 


Tags : Trump ,US ,India ,visit ,Kashmir , India, US President, Trump, Kashmir, Citizenship, Problem, Prime Minister, Modi
× RELATED அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம்...