கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவுவதற்கு முன்பாக உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் : அனைத்து நாடுகளுக்கு WHO எச்சரிக்கை மணி

வாஷிங்டன் : கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவுவதற்கு முன்பாக உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு இஸ்ரேல், ஈரான், லெபனான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு பரவி விட்டதால் இந்த எச்சரிக்கையை உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ளது. சீனாவின் அதிகளவு பரவிய கொரோனா வைரஸ் தற்போது மத்திய கிழக்கு நாடுகளையும் தாக்க தொடங்கியுள்ளது. ஈரானில் கடந்த 2 நாட்களில் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேலிலும் லெபானானிலும் இத்தாலியிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கி உள்ளது. எனவே எந்த திசையில் வேண்டுமானாலும் கொரோனா வைரஸ் வெடித்து பரவலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கோவிட் 19 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2,345 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் சீனர்கள் மட்டும் 2,232 ஆவர். சீனாவில் நேற்று மட்டும் மேலும் 118 பேர் உயிரிழந்துள்ளனர். 25 நாடுகளில் இந்த கொடிய கொரோனா வைரஸ் பரவி உள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 76,000 ஆக உயர்ந்துள்ளது.இதனிடையே ஈரானுக்கான விமான சேவைகளை  குவைத் நிறுத்தியுள்ளது.

Related Stories: