×

குழந்தைகளுடன் பெண் தற்கொலை கணவனுக்கு சிறை

ஆவடி: ஆவடி அடுத்த சேக்காடு மெயின் ரோட்டை சேர்ந்தவர் முத்துமாரி (25). இவரது மனைவி விஜயலட்சுமி (23). தம்பதிக்கு கலாசரன் (3), நிஷாந்த் (1) ஆகிய இரண்டு குழந்தைகள்.  கடந்த 17ம் தேதி இரவு தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முத்துமாரி, விஜயலட்சுமியை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த விஜயலட்சுமி 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆவடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில், விஜயலட்சுமிக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆனதால், திருவள்ளூர் ஆர்.டி.ஒ விசாரணைக்கு உத்தரவிட்டனர். இதற்கிடையில், குழந்தைகளுடன் விஜயலட்சுமியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் முத்துமாரியை நேற்று  போலீசார் கைது செய்தனர். பின்னர், ரயில்வே போலீசார் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.Tags : Prisoner ,woman suicide husband , Children, female suicide, husband to prison
× RELATED புழல் சிறையில் சிறைக்காவலர், தண்டனை...