×

மக்களை ஏமாற்றும் 600 பிராடு ‘ஆப்’களுக்கு திடீர் தடை: கூகுள் அதிரடி

நியூயார்க்: பொதுமக்களை ஏமாற்றி மோசடி செய்து வந்த 600 ‘ஆப்’களை தடை செய்து கூகுள் தன் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி விட்டது. கூகுள் பிளே ஸ்டோரில் லட்சக்கணக்கான ‘ஆப்’கள் உள்ளன. ஆப்கள் எந்த வகையிலும் பாதிக்கும் வகையிலோ, மோசடித்தனமாகவோ இருக்க கூடாது. இதற்காக தான் நாங்கள் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். சமீபத்தில் எடுத்த கணக்கு படி, 600 ஆப்கள் பிளே ஸ்டோரில் இருந்து உடனே நீக்கப்பட்டன’ என்று கூகுள் நிர்வாக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

‘கூகுள் பிளே ஸ்டோரில் போடப்படும் ஆப்களை கண்காணிக்க கூகுள் ஆட் மேனேஜர், கூகுள் ஆட்மாப் என்று இரு பிரிவுகள் இயங்கி வருகின்றன. அவ்வப்போது இந்த பிரிவுகள் ஆப்களை ஆராய்ந்து, அவை மக்களுக்கு பயன் உள்ளதா என்று உறுதி செய்யும்’ என்று கூகுள் அதிகாரி பெர்  ஜோர்க் கூறினார். தடை செய்யப்பட்ட சில ஆப்கள் சீனாவில் இருந்து வெளியானவை என்று தெரியவந்துள்ளது. சீடா மொபைல் கம்பெனி வெளியிட்ட ஆப் ஏற்கனவே சர்ச்சையில் சிக்கி இருந்தது. அந்த ஆப் தான் இப்போது தடை செய்யப்பட்ட ஆப்களில் முக்கியமானது என்று கூறப்படுகிறது.

‘ஆப்’ வைக்கும் ஆப்கள்
கவர்ச்சி விளம்பரங்களை தாங்கி வரும் ஆப்கள் தான் பெரும்பாலும்  ேமாசடி செய்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு மிகவும் நேர்மையானதாக காட்டிக்கொள்ளும் இந்த ஆப்கள் மூலம் பல கோடிக்கணக்கில் சுருட்டப்பட்டுள்ளது.  பெரும்பாலும் ஆங்கிலம் பேசும், வெளிநாட்டு மக்களை ஏமாற்றும் வகையில் தான் இந்த மோசடி ஆப்கள் உருவாகி  வருகின்றன என்றும் தெரியவந்துள்ளது.

450 கோடி மக்கள் பணம் போச்சு
மோசடி ஆப்கள் பற்றி கூகுள் கண்காணிப்பு பிரிவுகள் ஆராய்ந்து கண்டுபிடித்த இன்னொரு அதிர்ச்சி தகவல், மொத்தம் 450 ேகாடி பேரை பல வகையிலும் இந்த 600 ஆப்கள் ஏமாற்றி வந்துள்ளன. மேலும் இவர்களில் பல கோடி பேர், பணத்தையும் இழந்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.



Tags : Google , Sudden ban , 600 Broadcasts ,Deception,Google Action
× RELATED தவறான தகவல் பரவுவதை தடுக்க தேர்தல் கமிஷனுடன் கைகோர்த்தது கூகுள்