×

கள்ளக்காதலியுடன் சேர்ந்து சொத்து, நகைகளை பறித்துக்கொண்டு கணவன் கொலை மிரட்டல் விடுக்கிறார்: கமிஷனர் அலுவலகத்தில் மனைவி புகார்

சென்னை: கள்ளக்காதலியுடன் சேர்ந்து, 140 சவரன் நகை மற்றும் சொத்துகளை எழுதி வாங்கிக்கொண்டு கொலை மிரட்டல் விடுப்பதாக, தனது கணவர் மீது மனைவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.  அடையாறு இந்திரா நகரை சேர்ந்த ரம்யா (28) என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:வாணியம்பாடியை சேர்ந்த சாரதி குமார் என்பவரை, இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 10.2.2016ம் ஆண்டு திருமணம் செய்தேன். திருமணத்திற்கு பிறகு தான் எனக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. எனது கணவர் சேலத்தில் படிக்கும் போது, சத்யப்பிரியா என்பவருடன் நட்பு இருந்துள்ளது. இந்த நட்பால் கணவரை அவர் முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன். இதனால் எங்களுக்குள் சண்டை வந்தது. அவர் கட்சி ஒன்றில் வாணியம்பாடி நகர செயலாளராக இருக்கிறார். சத்யப்பிரியாவின் சகோதரர் காவல் கண்காணிப்பாளராக இருப்பதால் நான் அப்போது காவல் நிலையத்தில் புகார் அளிக்க வில்லை.

ஆனால், சத்யப்பிரியா நேரடியாக வீட்டிற்கே வர தொடங்கினார். இருவரும் வீட்டிலேயே மது அருந்துவதும், ஒரே அறையில் தூங்குவதுமாக இருந்தனர். நான் வயிற்றில் குழந்தை இருந்ததால் அமைதியாக இருந்தேன். பிறகு சத்யப்பிரியாவின் பேச்சை கேட்டு, திருமணத்திற்கு என் வீட்டில் கொடுத்த 140 சவரன் நகையை வாங்கி வங்கியில் அடகு வைத்துவிட்டார். மேலும், என் தந்தையின் பெயரில் இருந்த சொத்து மற்றும் ரூ.20 லட்சம் பணத்ைத என்னை மிரட்டி கணவர் வாங்கிக்கொண்டார். ஒரு கட்டத்தில் கணவர் மீது எனது தந்தை காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பிறகு என் கணவரின் நண்பர்கள் மற்றும் சத்யப்பிரியாவின் நண்பர்கள் மூலம் எனக்கு கொலை மிரட்டல் வந்தது.

இதனால் நான் அடையாறில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டேன். இந்த சம்பவம் குறித்து நான் கட்சி தலைவரை நேரில் சந்தித்து கணவர் மீது புகார் அளித்தேன். அதற்கு அவர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன்பிறகு நான் வெளியே வந்து காரில் ஏறும் போது, என் கணவர் என்னை தள்ளிவிட்டு கழுத்தில் கத்தியை வைத்து, ‘‘என்ன தைரியம் இருந்தால் இங்கு வந்து என்னை நீ அவமானப்படுத்துவாய்,’’ என்று கூறி கட்டிய தாலியை அறுத்துக் கொண்டார். எனவே கணவர், அவரது கள்ளக்காதலி சத்யப்பிரியாவிடம் இருந்து எனக்கும் எனது குழந்தைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.



Tags : commissioner ,office , Counterfeiting, property, jewelery, murder of husband, commissioner's office, wife
× RELATED காலை 5.30 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவு:...