×

நர்ஸ் கொலை வழக்கில் தூக்குத்தண்டனை கைதிகளுக்கு நோட்டீஸ்

மதுரை: நெல்லை மாவட்டம், கல்லிடைகுறிச்சி, கேட்வாசல் தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வி (41). மணிமுத்தாறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றினார். கணவர் இறந்ததால் தனியாக வசித்து வந்தார். கடந்த 29.9.2008 அன்று இரவு தமிழ்செல்வி வீட்டில் தனியாக இருந்தபோது, மர்ம கும்பல் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தது. அந்தக் கும்பல் தமிழ்செல்வியின் வாயில் துணியை திணித்து கழுத்தை நெரித்துக் கொலை செய்து வீட்டில் இருந்த நகையை கொள்ளையடித்துச் சென்றது. இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் விசாரித்தனர்.  விசாரணையில், தமிழ்செல்வி பலாத்காரம் ெசய்யப்பட்டு கொலையானதும், 67 கிராம் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டதும் தெரிய வந்தது. கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக கல்லிடைக்குறிச்சி கார்த்திக் (21), மகேந்திரன் (24), வசந்தகுமார் (30), ராஜேஷ் (27), கணேசன், சின்னத்துரை (27) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.  இந்த வழக்கின் விசாரணை நெல்லை மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது.

வழக்கில் கடந்த பிப்.12ல் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், வசந்தகுமார் மற்றும் ராஜேஷ் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து இருவருக்கும் வழங்கிய தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பாக, ஐகோர்ட்டின் உத்தரவை பெறுவதற்காக கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் தரப்பில் நேற்று ஐகோர்ட் கிளையில் மனு செய்யப்பட்டது.  இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.ராஜா, பி.புகழேந்தி ஆகியோர், மனு குறித்து தூக்கு தண்டனை பெற்ற இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.


Tags : prisoners ,Hanging Prisoners , Nurse Murder, Execution Prisoner, Notice
× RELATED வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு...