×

அரியலூர் காட்டுப்பகுதியில் பீர் குடிக்கும் பள்ளி மாணவிகள்: சமூக வலைதளங்களில் வைரல்

அரியலூர்: அரியலூர் காட்டுப்பகுதியில் பள்ளி மாணவிகள் மது அருந்தும்  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் 5200 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் ஆண்கள் கூட்டம் அலைமோதும். ஆண்டுக்காண்டு  டாஸ்மாக்கில் விற்பனை அதிகரித்து வருகிறது. குடிக்கு அடிமையானவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதனால், மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.  இந்தநிலையில், பள்ளி சீருடையில் உள்ள 3 மாணவிகள்  பீர் குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், காட்டுப்பகுதியில் பள்ளி மாணவிகள் வட்டமாக அமர்ந்து உள்ளனர். அவர்களில் ஒருவர் பீர் பாட்டில்களை திறக்கிறார். மற்றொருவர் குளிர்பான பாட்டில், கிளாஸ்களை வைக்கிறார். பிறகு, பீரை கிளாஸ்களில் ஊற்றி ‘சீயர்ஸ்’ என்று குடிக்கிறார்கள்.

சைட் டிஷ்க்கு மிக்சர் சாப்பிடுகிறார்கள். இதுபோன்று பீரை கிளாஸ்களில் கொஞ்சம் கொஞ்சமாக  ஊற்றி இடையிடையே மிக்சரை தின்றவாறு, பரம்பரை குடிகாரர்கள்போல அரட்டையடித்தவாறு அருந்துகிறார்கள். இதை  இன்னொரு மாணவி மொபைல் போனில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரமாக இந்த வீடியோ அரியலூர் மாவட்டத்தை கலக்கி வருகிறது. இதுபற்றி அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் விசாரித்தபோது, இந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அந்த சீருடை கிடையாது. ஆனாலும் இந்த மாணவிகள் அரியலுார் மாவட்டத்தில் ஏதோ ஒரு பகுதியை சேர்ந்த 15 வயது மாணவிகள்தான் என தெரிகிறது. எனவே, மது வாங்கி அருந்தும் மாணவிகள் எந்த பள்ளியை சேர்ந்தவர்கள், எந்த பகுதியை சேர்ந்தவர்கள், அவர்களுக்கு இந்த மது எப்படி கிடைத்தது. மாணவர்கள் வாங்கி கொடுத்தார்களா என அரியலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : forest ,School students ,Ariyalur , Ariyalur Wilderness, Beer, School Students
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...