இடஒதுக்கீட்டுக்கு தடையாக இருந்தால் கிரிமீலேயர் முறையை அரசு நீக்க வேண்டும்: ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை:  பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:    மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமூகநீதியை நிலை நிறுத்த, ஊதியத்தை கணக்கில் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையை மத்திய அரசு ஏற்கக்கூடாது, கிரிமீலேயர் வரம்பை அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ. 11 லட்சமாக உயர்த்த வேண்டும் என வல்லுனர் குழு பரிந்துரைத்துள்ள நிலையில், அதை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு கிரிமீலேயர் எந்த அளவுக்கு தடையாக உள்ளது என்பதை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மூலம் ஆய்வு செய்து, இட ஒதுக்கீட்டுக்கு கிரிமீலேயர் தடையாக இருப்பது உறுதி செய்யப்பட்டால் கிரிமீலேயரை முழுமையாக நீக்க மத்திய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: