×

சைட் டிஷ்ஷோடு ‘தண்ணி’ அடிக்கும் மாணவிகள்: சமூக வலைதளங்களில் வைரல்

அரியலூர்: சைட் டிஷ்ஷோடு பள்ளி மாணவிகள் தண்ணி அடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதுபற்றிய விவரம் வருமாறு: பள்ளி மாணவிகள் சிலர் பீர், குளிர்பானம், சைடிஷ்ஷாக மிக்சருடன் காட்டுப்பகுதிக்கு சென்று வட்டமாக உட்கார்ந்து கொள்கின்றனர். பின்னர் பீர் பாட்டிலை திறந்து பிளாஸ்டிக் டம்ளர்களில் பீரை ஊற்றி கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கிறார்கள். இடையிடையே மிக்சர் பாக்கெட்டில் இருந்து எடுத்து மிக்சரை தின்றவாறு பீரை ருசித்து ரசித்து குடிக்கின்றனர்.

இதை அங்கிருந்த இன்னொரு மாணவி மொபைல் போனில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது பற்றி அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் விசாரித்தபோது இந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இந்த சீருடை கிடையாது. எனவே இது எங்கள் பகுதி பள்ளி மாணவிகள் இல்லை என கூறுகிறார்கள். அதனால், வேறு பகுதியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tanani , Students
× RELATED மீன்பிடி தடைக்காலத்தில் முதல்வர்...