×

சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டவை அனைத்தும் மக்கள் மீது அக்கறையற்ற செயல்பாடுகள் - ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டவை அனைத்தும் மக்கள் மீது அக்கறையற்ற செயல்பாடுகள் என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். திமுக உறுப்பினர்கள் பேரவையில் எழுப்பிய பிரச்சனைகளுக்கு உரிய பதிலை ஆளும் தரப்பு வழங்கவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை அளித்துள்ளார். காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்ததால் திடீரென வேளாண் மண்டலம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதை திமுக வரவேற்பதாக ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதிமுக அரசு வாக்கு அரசியலை மையமாக வைத்து பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவித்துள்ளது. அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் மண்டலம் மசோதாவில் குறைகள் இருப்பதை அமைச்சர் சி.வி.சண்முகமம் ஒப்புக்கொண்டார். அரசியல் சட்டத்துக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டத்தை செயல்படுத்த அதிமுக வேகம் காட்டுகிறது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். என்.பி.ஆர் கணக்கெடுப்பு நடக்காது என்ற உறுதிமொழியை வழங்கிட ஆட்சியர்கள் தயாராக இல்லை. உறுதிமொழி அளிக்க தயங்குவதற்கு காரணம், டெல்லி பாதுஷாக்களிடம் உள்ள பயம் தான் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Stalin ,session ,act , Stalin
× RELATED சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி...