கிழக்கு திசைகாற்றின் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு : குமரிகடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை

சென்னை : கிழக்கு திசைகாற்றின் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கன்னியாகுமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் மணிக்கு 45 கிமீ முதல் 55 கிமீ வரை பலத்த சூறைக்காற்று வீசும் என்பதால் கடலுக்குள் மீன்பிடிக்க வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே சமயம் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்ஷியஸும் குறைந்த பட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்ஷியஸும் பதிவாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக தமிழ்நாட்டில் வருகிற மார்ச் மாதத்தில் வெப்பநிலை வழக்கத்தை விட 1 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

Related Stories: