×

புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதில் பணம் : கிரண்பேடி பிறப்பித்த உத்தரவு செல்லும் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சென்னை: புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதில் பணம் வழங்க துணைநிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. புதுவையில் அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் அரிசிக்கு பதிலாக பணம் வழங்க வேண்டுமென ஆளுநர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக புதுவை முதல்வர் நாராயணசாமி தொடர்ந்த வழக்கின் இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 வழக்கின் பின்னணி

ஏழை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு புதுச்சேரியில் மாதம் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. பொது மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசியின் எடை குறைவாக உள்ளது. எனவே, அரிசிக்குப் பதிலாக பயனாளிகளுக்கு ரொக்கப்பணம் வழங்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டார்.  இந்த உத்தரவை எதிர்த்து புதுவை முதல்வர் நாராயணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயேன் முன் விசாரணைக்கப்பட்டு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

வழக்கின் தீர்ப்பு

இந்நிலையில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.அதில், இலவச அரிசிக்கு பதில் பணம் கொடுக்க கிரண்பேடி பிறப்பித்த உத்தரவு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தொடர்ந்த மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Puducherry ,
× RELATED புதுச்சேரியில் பரபரப்பு பறக்கும்படை சோதனையில் ₹3.5 கோடி பணம் சிக்கியது