சுமார் 39 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் ராணுவ வீரர்களுக்கான மெகா குடியிருப்பு திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அடிக்கல்

டெல்லி : சுமார் 39 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் ராணுவ வீரர்களுக்கான மெகா குடியிருப்பு திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அடிக்கல் நாட்டினார். டெல்லியின் கண்டோன்மென்ட் பகுதியில், ராணுவத்திற்கான புதிய தலைமையகம் கட்டப்படவுள்ளது. தால் சேனா பவன் என பெயரிடப்பட்டுள்ள கட்டடத்திற்கு, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் சர்வ சமய வழிபாடுகளுடன் அடிக்கல் நாட்டி பணிகளை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். .இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தளபதி எம்.எம்.நரவானே ஆகியோர் கலந்து கொண்டனர்.

புது டெல்லியில் ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவானே முன்னிலையில் தால் சேனா பவன் என்ற குடியிருப்பு மற்றும் அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசம் காக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ள ராணுவ வீரர்களின் வீரம் குறித்து பெருமிதம் தெரிவித்தார். அலுவலக கட்டிடம், பார்க்கிங் என ஏறக்குறைய 7.5 லட்சம் சதுர மீட்டரில் ராணுவ தலைமையக வளாகம் அமைய உள்ளது. 1, 684 ராணுவ வீரர்கள் மற்றும் 4,330 ஊழியர்களுக்கான இல்லங்களுடன் மொத்தம் 6,000 குடியிருப்புகள் அடங்கும்.   இதனால் இளைஞர்கள் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இந்த கட்டிடத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.

Related Stories: