×

கொரோனா வைரஸ் எதிரொலி: சீனாவில் டிவி பேனல் உற்பத்தி பாதிப்பு...இந்தியாவில் விலை உயர வாய்ப்பு!

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனாவில் பேனல் உற்பத்தி பாதித்து விநியோகம் முடங்கி இருப்பதால் இந்தியாவில் தொலைக்காட்சி பெட்டிகளின் விலை அடுத்த மாதம் முதல் 10 சதவீதம் வரை உயரலாம் என்று கூறப்படுகிறது. விலை குறைவு என்பதால் சீனாவில் இருந்து பேனல்களை அதிகளவில் டிவி தயாரிப்பு நிறுவனங்கள் இறக்குமதி செய்து வருகின்றன. சீனாவில் கொரோனா தோற்று காரணமாக தொழிற்சாலைகளில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் தொலைக்காட்சிகளின் விலை வரும் மார்ச் மாதம் முதல் 10 விழுக்காடு உயரும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. தொலைக்காட்சி தயாரிப்பதற்கு தேவையான முக்கிய உதிரி பாகமான டிவி பேனல்கள் சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. டிவிக்களில் உள்ள இந்த பேனல்களின் விலை மொத்த விலையில் சுமார் 60 விழுக்காடாகும்.

சீன புத்தாண்டையொட்டி அங்கு நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் இந்தியாவில் டிவிக்களை தயாரிக்கும் நிறுவனங்கள் டிவி பேனல்களை இருப்பு வைத்திருந்தன. ஆனால் சீன புத்தாண்டை தொடர்ந்து அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் உற்பத்தி ஆலைகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் டிவி பேனல்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அவற்றின் விலை சுமார் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தொழிற்சாலை அதிகாரிகள் கூறுகின்றனர். சீனாவில் இருந்து டிவி பேனல்கள் இந்தியாவுக்கு இறக்குமதியாவதால் இங்கும் டிவிக்களில் விலை 10 விழுக்காடு உயர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, ஏசி,  பிரிட்ச் உள்ளிட்டவைகளுக்கான கம்ப்ரசர்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் அவற்றின் விலையும் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது.


Tags : Corona ,China ,India , Corona, China, TV Panel, Manufacturing, India, Price Opportunity
× RELATED நீருக்கடியில் ஆய்வு; இந்தியாவுடன்...