தொடர் இறப்புகள் எதிரொலி : ஈவிபி படப்பிடிப்பு வளாகத்தில் பேய் நடமாட்டம் உள்ளதாக ஊழியர்கள் அச்சம்

சென்னை : சென்னை அருகே ஈவிபி படப்பிடிப்பு வளாகத்தில் பேய் நடமாட்டம் உள்ளதாக ஊழியர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். சென்னை பூவிருந்தவல்லி அடுத்த 2 கி.மீ. தொலைவில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி 200 ஏக்கர் பரப்பளவில் ஈவிபி படப்பிடிப்பு வளாகம் உள்ளது. இங்கு செயல்பட்ட பொழுதுபோக்கு பூங்காவில் சில ஆண்டுகளுக்கு முன் ராட்சத ராட்டினம் அறுந்து விழுந்ததில் அபியா மெக் என்ற விமான பணி பெண் உயிரிழந்தார். அதனால் பொழுது போக்கு பூங்கா இழுத்து மூடப்பட்டது.

அதன் பிறகு இங்கு செயல்பட்டு வரும் ஈவிபி படப்பிடிப்பு வளாகத்தில் தான் நேற்று முன்தினம் இந்தியன் 2 படப்பிடிப்பின் போது, கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தனர்.இதற்கு முன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் படப்பிடிப்பு நடந்த போது, மின்சாரம் தாக்கி எலெக்ட்ரிஷியன் ஒருவர் இங்கு உயிரிழந்தார். மொத்தமாக இந்த ஈவிபி பூங்காவில் இறந்தவர்கள் மட்டும் 7 பேர் ஆவர்.

இந்த உயிரிழப்புகள் அனைத்தும் ஒரே இடத்தில் நடந்து இருப்பதால் அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.உயிரிழந்தவர்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் போது, 3 பேர் தற்கொலைக்கு முயன்றதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஈவிபி பூங்காவின் தரம், கட்டுமானம் ஆகியவை குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: