கறம்பக்குடி அரசு தாலுகா மருத்துவமனை நுழைவாயில் முன் மின்விளக்குகள் எரியாததால் நோயாளிகள் அவதி

கறம்பக்குடி: கறம்பக்குடி அரசு தாலுகா மருத்துவமனை நுழைவாயில் முன்பு மின்விளக்குகள் எரியாததால் நோயாளிகள் அவதியுற்று வருகின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் அரசு தாலுகா மருத்துவமனை இயங்கி வருகிறது இம்மருத்துவமனையில் புதிய கட்டிடம் கட்டி தரக்கோரி கறம்பக்குடி பகுதியை சேர்ந்த பல்வேறு அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர்.அதன் பிறகு 33 படுக்கை வசதிகள் கொண்ட கட்டிடம் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சிறப்பு வசதிகள் கொண்ட புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இதில் தொழிலாளிகள் சிறப்பு தனி பிரிவு மற்றும் குழந்தைகள் நல பிறப்பு சிறப்பு வசதிகள் கொண்ட பிரிவுகள் இயங்கி வருகிறது அந்த கட்டிடம் முன்பு நுழைவாயில் அமைந்துள்ளது இந்த நுழைவாயிலிருந்து காலை ,மாலை , இரவு,நேரங்களில் தினமும் சுமார் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் பொது மக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த பல மாதங்களாக நுழைவு வாயிலில் மின் விளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் செல்லும் நோயாளிகள் தடுமாறி கீழே விழும் அவல நிலைக்கு ஆளாகின்றனர்.

இது குறித்து பல முறை நோயாளிகள் மற்றும் பொது மக்கள் புகார் கூறியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே இனிமேலாவது சம்மந்தபட்ட சுகாதார துறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உடனடியாக இருளில் மூழ்கியுள்ள அரசு தாலுகா மருத்துவமனை புதிய கட்டிட வளாக நுழைவுவாயிலில் உள்ள மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என சுகாதார துறை அமைச்சருக்கு கறம்பக்குடி பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Related Stories: