பஸ் வசதியின்றி அவதியுறும் குரும்பலூர் அரசு கல்லூரி மாணவர்கள்

பெரம்பலூர்: கடந்த 10ஆண்டுகளாக பஸ்வசதியின்றி குரும்பலூர்அரசுகல்லூரி மாணவர்கள் அவதியுற்று வருகின்றனர். பஸ் படிகளில் 10 பேர்,ஏணிகளில் 4பேர் என சாலையில் சாகசப் பயணம் மேற்கொள்கின்றனர். 750 மாணவர்களுக்கு 2 பஸ் மட்டுமே இயங்குகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 4 தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் இயங்கி வரும் நிலையில் கடந்த திமுக ஆட்சியின் போது 2006ம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியை முன்னாள் மத்திய அமைச்சர் ராசா முன்னிலையில் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பெரம்பலூரில் அரசு கட்டிடத்தில் இட நெருக்கடியில் இயங்கி வந்த பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி 2009ம் ஆண்டு முதல் பெரம்பலூர் துறையூர் சாலையில் குரும்பலூர் அருகே இயங்கி வந்தது. இந்தக்கல்லூரி 2019ம் ஆண்டு முதல் அரசு கலை அறிவியல் கல்லூரியாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த அரசுக் கல்லூரியில் மொத்தம் 1,750 மாணவ மாணவியர் இங்கு கல்விபயின்று வருகின்றனர்.

1,425 மாணவ,மாணவியருக்கு இலவச பஸ்பாஸ் வழங்கிய அரசுப் போக்குவரத்துக்கழகம், அதற்கு ஏற்றபடி பெரம்பலூர் துறையூர் வழித்தடத்தில் குறிப்பாக பீக் ஹவர் எனப்படும் கல்லூரி தொடங்கி, முடியும் நேரங்களில் போதுமான பஸ்களை இயக்காததால் குரும்பலூருக்கு இடம்பெயர்ந்து சொந்தக்கட்டிடத்தில் இயங்கி வந்தாலும் போக்குவரத்து வசதியின்றி 10ஆ ண்டுகளாகப் பரிதவித்தே வருகின்றனர்.குறிப்பாக காலையில் 8.30 மணிக்கு கல்லூரி செல்ல காலை 7.45முதல் 8.45 மணிக்குள்ளாக துறையூருக்கு 8.20க்கு 1, 8.40க்கு ஒன்று என 2அரசு புறநகர் பஸ்களும், 8.15மணிக்கு களரம்பட்டிக்குச் செல்லும் 1அரசு டவுன் பஸ் என 3பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. கோவை செல்லும் பஸ்சில் பஸ் பாஸ் ஏற்க மாட்டார்கள்.

இதனால் கிடைக்கும் 2 பஸ்களில் 52பேர் என்ற விதிகளைக் கடந்து பஸ்சுக்கு 100க்கும் மேற்பட்டோரை திணித்து ஏற்றிச்செல்லும் அவலம் உள்ளது. பத்துக்கும் மேற்பட்டோர் படிகளிலும், ஏழெட்டு பேர் பின்புற ஏணியிலும் தொங்கிக் கொண்டு சாலையில் தினமும் உயிரைக் கையில் பிடித்தபடி சாகசப் பயணம் செய்து வருகின்றனர். இதற்காக மாணவ, மாணவியர் கலெக்டருக்கு மனு கொடுத்துப் பார்த்து விட்டனர். முழுமையா ன தீர்வு கிடைக்காததால் சாலைமறியல், பஸ்கள் சிறைபிடிப்பு,கல்வீச்சு என கலாட்டா செய்து பார்த்தும் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து நீடித்து வரும் இழிநிலைக்கு மாவட்ட நிர் வாகமோ, அரசுப் போக்குவரத்துக் கழகமோ நிரந்தரத் தீர்வு காணவேண்டும் என மாணவ மாணவியர் பேராசிரியர்கள், அலுவலர் கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பஸ் மீது கல்வீச்சு

இந்நிலையில் நேற்று மாலை 5.30மணிக்குக் கல்லூரி வகுப்புகள் முடிவடைந்த நிலையில், 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் இரவு 7மணிவரை பஸ் வசதி இல்லாமல் காத்துக் கிடந்தனர். 7மணிக்கு துறையூர் நோக்கிச்சென்ற அரசு பஸ் ஒன்று மாணவ, மாணவியர் கைகாட்டி மறித்துப் பார்த்தும் நிற்காமல் சென்றது. இதனால் ஒன்றரை மணி நேரமாக காத்துக்கிடந்த மாணவர்கள் சிலர் ஆத்திரத்தில் கற்களை எடுத்து வீசி பஸ் கண்ணாடியை உடைத்தனர். தகவலறிந்து பெரம்பலூர் டிஎஸ்பி கென்னடி, இன்ஸ்பெக்டர் நித்யா உள்ளிட்டப் போலீசார் அங்கு சென்று நின்று கொண்டிருந்த அரசு பஸ்சையும் மாணவ, மாணவியரையும் பா துகாப்பாக அனுப்பி வைத்தனர்.

Related Stories: