ஏப்ரல் 1ம் தேதி முதல் பிஎஸ்-6 முறை அமலுக்கு வருவதால், உலகின் தரம் மிகுந்த எரிபொருளை பயன்படுத்தும் நாடாக மாறும் இந்தியா!!

டெல்லி : தரம் உயர்த்தப்பட்ட பிஎஸ்-6 இன்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்கள் மட்டுமே வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளது. .இதற்கேற்ப அன்றைய தினமே உலகின் சுத்தமான பெட்ரோல், டீசல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. அதாவது யூரோ-4 ரக எரிபொருள்களில் இருந்து நேரடியாக யூரோ-6 ரக எரிபொருள்களுக்கு இந்தியா மாறுகிறது. உலகில் எந்த நாடும் மிகக்குறைவாக 3 ஆண்டுகளுக்குள் இத்தகைய மாற்றத்தைக் கொண்டுவந்தது இல்லை. ஆனால், இந்தியா மட்டுமே குறுகிய காலத்தில் அதாவது யூரோ-4 எரிபொருள் கொண்டு வந்த அடுத்த 3 ஆண்டுகளுக்குள் யூரோ-5 எரிபொருட்களுக்குச் செல்லாமல் நேரடியாக யூரோ-6 எரிபொருளுக்கு மாறுகிறது.

பிஎஸ்6 வாகனங்கள் என்றால் என்ன..? .. பிஎஸ்-4 மற்றும் பிஎஸ்-6 ஆகிய இரு வாகனங்களுக்கு இடையேயான வித்தியாசம் என்ன..?

சமீப காலமாக இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை மக்கள் தொகைக்கு இணையாக உயர்ந்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை அதிகளவில் நச்சுத் தன்மைக் கொண்டவையாக இருக்கின்றது.  அதிலும், பெட்ரோல் வாகனத்தைவிட டீசல் வாகனத்தில் அதன் அளவு மிகவும் அதிகளவில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது. இது, புவி வெப்ப மயமாதல் மற்றும் பல்வேறு வியாதிகளுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.  ஆகையால், இதில் தீர்வு காணும் விதமாகவே பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது தற்போது பயன்பாட்டில் இருக்கும் பிஎஸ்-4 தரம் கொண்ட எஞ்ஜின்களை உடைய வாகனங்களைவிட மிக மிக குறைந்தளவு நச்சு தன்மையையே வெளிப்படுத்துகின்றன.

இதன்காரணமாகவே, 2020 ஏப்ரல் 1ம் தேதிக்கு பின்னர் பிஎஸ்-6 தரத்திற்கு குறைவான வாகனங்களை விற்பனை அல்லது உற்பத்தி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பிஎஸ்-6 தரத்திற்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளையும் விற்பனைச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.  இந்த நடவடிக்கையால் பிஎஸ்-4 தர எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் நிலை என்னவென்று கேள்வி எழும்பியுள்ளது..நீங்கள், பெட்ரோலில் இயங்கும் எஞ்ஜின் கொண்ட கார் அல்லது பைக்கை வைத்திருப்பவரானால் இதைக் கண்டு அச்சப்பட தேவையில்லை.இவ்விரு தர எரிபொருளிலும் சிறு வேதியியல் மாற்றமே செய்யப்பட்டுள்ளது. ஆகையால், இது பிஎஸ்-4 தரம் கொண்ட பெட்ரோல் எஞ்ஜின் வாகனத்திற்கு துளியளவும் பாதிப்பை ஏற்படுத்தாது.

ஆனால், நீங்கள் பிஎஸ்-4 தரத்திலான எஞ்ஜினுடைய வாகனத்தை வைத்திருப்பவரானால் சற்றே கவலைக் கொள்ளக் கூடிய விஷயமாக உள்ளது. ஆனால், அது சிறிய எரிபொருள் கலவை மூலம் சீர் செய்யப்படும் என்பதால் நீங்கள் பெரியளவில் தேவையில்லை.  தற்போது நாம் வாங்கும் டீசலில் குறைந்தபட்சம் சல்பரின் (கந்தகம்) அளவு 50 விழுக்காடு உள்ளது. ஆனால், புதிய பிஎஸ்-6 எரிபொருளிலோ அது 10PPM (parts per million) ஆகவே உள்ளது. இது சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உதவும்.  

எரிபொருளில் சல்பரின் பங்களிப்பு என்ன, ஏன் பிஎஸ்-4 டீசல் எஞ்ஜினில் பிஎஸ்-6 தர டீசலை பயன்படுத்தக்கூடாது..?

டீசல் என்ஜின்களில் இருக்கும் இன்ஜெக்டர்கள் டீசலை திரவ நிலையில் இருந்து அணு தெளிப்பாக மாற்றும் பணியை செய்கிந்றது. இவ்வாறு, மாறிய பின்னரே அவை சிலிண்டரில் எரியத் தொடங்கும். அப்போது, ஒரு சில எரிபொருள் சிலிண்டரின் வழியாக இன்ஜெக்டருக்குள் கசிய முற்படும். அவ்வாறு, அது கசியுமேயானால் அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனை ஏற்படுத்தாமல் தவிர்ப்பதே இந்த சல்பரின் பணியாக உள்ளது.  அதாவது, சல்பர் டீசல் எஞ்ஜினின் இன்ஜெக்டர்களில் எரிபொருளை செலுத்தும்போது மசகு (lubricant) எண்ணெய்யைப் போல் செயல்படுகின்றது.

இதுவே அதன் முக்கிய பணியாக உள்ளது. ஒரு வேலை எரிபொருளில் சல்பரின் அளவு குறையுமேயானால் எந்திரத்திற்கு சீரற்ற அளவில் எரிபொருள் கடத்தப்படும்.  இதனால், எரிப்பு திறமையில் பாதிப்பு ஏற்பட்டு, உமிழ்தலின் அளவு அதிகரிக்கும். இது பல்வேறு பின்விளைவுகளுக்கு வழிவகுக்கும். இதனாலேயே பிஎஸ்-4 எஞ்ஜினில் பிஎஸ்-6 தரம் கொண்ட எரிபொருளை பயன்படுத்தக்கூடாது என கூறப்படுகின்றது. ஆகையால், பிஎஸ்-4 வாகனத்தில் பிஎஸ்-6 தரத்திலான எரிபொருளை செலத்தும்போது பெட்ரோல் பங்க் ஊழியரிடம் குறிப்பிட்ட கலவையை கேட்டு பெறுதல் இனி அவசியமாக உள்ளது. 

Related Stories: