எழும்பூர் பிரிக்ளின் சாலையில் நவீன வசதியுடன் மின் மயானம் : திமுக எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: எழும்பூர் பிரிக்ளின் சாலையில் நவீன வசதியுடன் கூடிய மின் மயானம் ஏற்படுத்த வேண்டும் என்று திமுக எம்எல்ஏ பேரவையில் வலியுறுத்தி உள்ளார்.சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது எழும்பூர் தொகுதி எம்எல்ஏ ரவிச்சந்திரன் (திமுக) பேசியதாவது: எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பிரிக்ளின் சாலையில் அமைந்துள்ள மயானமானது கடந்த ஒரு ஆண்டாக பழுதடைந்த நிலையில் உள்ளது. புகை போக்கி முற்றிலும் பழுதடைந்துள்ளதால், மின் மயானத்தின் கீழ் பகுதியிலேயே நல்லடக்கம் செய்யக்கூடிய இடத்தில் புகை பரவுகிறது.

Advertising
Advertising

அங்கு உடல் எரிக்கப்படும் போது, புகை மண்டலமாக மாறுவதால், அருகில் வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, இந்த மயானத்தை நவீன வசதியுடன் கூடிய மின் தகன மேடையாக மாற்றி தர வேண்டும். அமைச்சர் வேலுமணி: சென்னையில் 199 மயான பூமிகள் மாநகராட்சி பராமரிப்பில் உள்ளன. அவற்றில் 25 எரிவாயு தகன மேடைகளாகவும், 9 எல்பிஜி தகன மேடையாகவும், 6 மின்சார தகன மேடைகளாகவும் நவீன முறையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மற்றவை படிப்படியாக மேம்படுத்தப்படும். பிரிக்ளின் சாலையில் உள்ள மயான மேடையை ஆய்வு செய்து அவற்றை நவீன மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories: