×

மேல்முறையீடு அவகாசம் காலாவதியாகும் முன் மரண தண்டனை தேதி பற்றி உத்தரவு பிறப்பித்தது ஏன்? : உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பாக குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய 60 நாட்கள் காலஅவகாசம் வழங்க வேண்டும். அந்த கால அளவு முடியும் முன் மரண தண்டனை உத்தரவை விசாரணை நீதிமன்றம் பிறப்பிக்கக் கூடாது என கடந்த 2015ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை மேற்கோள் காட்டி வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே தலைமையிலான அமர்வு நேற்று வழங்கிய உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

குற்றவாளி தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான காலஅவகாசம் முடியாத நிலையில் மரண தண்டனை உத்தரவை விசாரணை நீதிமன்றம் எப்படி வழங்கியது? இது தொடர்பாக விளக்கம் தரவேண்டும். நீதிமன்ற நடைமுறை இதுபோன்ற உத்தரவை வழங்க அனுமதிப்பதில்லை. பலாத்காரம் செய்து பெண்ணை கொலை செய்த வழக்கில் குற்றவாளி அனில் சுரேந்திர சிங் யாதவுக்கு மரண தண்டனை விதித்து குஜராத் அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடைவிதிக்கிறோம். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக விசாரணை நீதிமன்றம் மரணதண்டனை விதித்ததற்கான காரணத்தை சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கண்டறிந்து நீதிமன்றதுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

Tags : expiration ,Supreme Court , Death penalty ordered,appeal period,Supreme Court Question
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...