×

ஒன்லி மரக்கறிதான் நாட்டுக்கோழி, கறி சூப் இனி கிடையாது ஜீ: உணவு திருவிழாவில் ஏமாற்றம்

புதுடெல்லி: டெல்லியில்  கடந்த 19ம் தேதி உணவு திருவிழா தொடங்கியது. வருகிற 25ம் தேதி வரை இது நடைபெற உள்ளது. தேசிய அருங்காட்சியம், மத்திய  கலாச்சார துறை மற்றும்  ஓஎஸ்எம்எஸ் என்ற தனியார் அமைப்பு இணைந்து  இந்த உணவு திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளன. விழாவிற்கான  ஆன்லைன்  பதிவிற்கான அழைப்பிதழில் சைவ மற்றும் அசைவ உணவுகள் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. மீன், நாட்டுக்கோழி, கறி சூப், ஆட்டு ஈரல், கருவாடு உள்ளிட்டவை இந்த பட்டியலில் இடம்பெற்று  இருந்தது. இந்நிலையில் திடீரென செவ்வாயன்று  தேசிய அருங்காட்சியகம், குறிப்பிடப்படாத விதிகளை மேற்கோள் காட்டி அசைவ உணவுகள் வழங்குவதை நிறுத்தும்படி அறிவுறுத்தியது.  இதனையடுத்து உணவு திருவிழாவில் அசைவ உணவுகள்  கிடையாது என தற்போது குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கூடுதல் இயக்குனர் ஜெனரல் சுப்ரதா நாத் கூறுகையில், ஓஎஸ்எம்எஸ் நிறுவனம்,  அசைவ உணவு  வழங்குவது தொடர்பாக விரிவாக அருங்காட்சியக நிர்வாகிகளுடன்  ஆலோசனை நடத்தவில்லை. அவர்கள் எங்களிடம்  அனுமதி பெற்றனர். ஆனால் அசைவ உணவு குறித்து கலந்தாலோசனை செய்யவில்லை. நிறுவனத்தின் விதிகளின்படி இங்கு அசைவ உணவுகள் பரிமாறப்படுவதில்லை என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள் என நாங்கள் நினைத்தோம்.  ஆன்லைனில் முதல் நாள் அசைவ உணவு என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை நாங்கள் பார்த்த உடனே பட்டியலில் இருந்து அது நீக்கப்பட்டுவிட்டது.  அசைவ உணவுகளை வழங்குவது இல்லை என்பது எழுதப்பட்ட விதிமுறை இல்லை.  ஆனால் மற்றவர்களின்  உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், அசைவ உணவை நாங்கள் அனுமதிப்பது இல்லை. அருங்காட்சியகம் முழுவதும் பல்வேறு கடவுள் சிலைகள் உள்ளது. இவற்றை பார்க்க வரும் மக்களின் உணர்வுகளுக்கு  நாங்கள் மரியாதை தரவேண்டும். இது எழுதப்படாத கொள்கையாக பின்பற்றப்படுகிறது, என்றார்.


Tags : food festival , vegetable, folk, curry soup, food festival
× RELATED காஞ்சி கிருஷ்ணா கல்லூரியில் பாரம்பரிய உணவு திருவிழா