×

40 பெண்களுடன் தொடர்பு அம்பலம் வங்கி கேஷியரால் உயிருக்கு ஆபத்து மனைவி எஸ்.பியிடம் புகார் மனு: ‘2 பக்க கடிதம் எழுதி அன்பான மிரட்டல்’

தஞ்சை: திருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான் தெருவை சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார் (36). புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை இந்தியன் வங்கி கிளையில் கேஷியராக பணியாற்றி வருகிறார்.  இவரது தாய் லில்லி ஹைடா.  ஓய்வுபெற்ற அரசு ஊழியர். தந்தை ரயில்வேயில் பணியாற்றி ஓய்வுபெற்ற நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எட்வின் ஜெயக்குமார் தங்கை கேத்ரின் நிர்மலா திருமணமாகி  திருச்சியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இவர்களுக்கு சொந்தமாக தரைத்தளம், மேல்தளம் என வீடு உள்ளது. எட்வின் ஜெயக்குமார் வீட்டின் மேல்தளத்தில் உள்ள அவரது அறையிலேயே இருப்பார். கீழ்தளத்தில் தாய் மற்றும் அவரது சித்தி ரீட்டா வசித்து வந்தனர்.இந்நிலையில், தஞ்சை ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த அருள்மணி மகள் தாட்சர் (32) என்பவருக்கும் எட்வின் ஜெயக்குமாருக்கும்,கடந்த டிசம்பர் 2ம் தேதி திருமணம் நடந்தது. முதலிரவில் மனைவியுடன் எட்வின் இல்லை. மறுநாளும்  மனைவியை தவிர்த்து விட்டு தனி அறையில் இருந்தார். இதையடுத்து அவரது படுக்கை அறையை தாட்சர் சோதனையிட்டார். அப்போது 15 ஆன்ட்ராய்ட் செல்போன்கள் இருந்தது. அதில் ஆபாச படங்கள், உடலுறவு வீடியோ, கணவரின்  நிர்வாண படங்கள், குளிக்கும்போது வீடியோ காலில் நிர்வாணமாக பெண்களுடன் பேசுவது போன்ற பல வீடியோக்கள் இருந்தது. தாட்சரின் விசாரணையில் 40 பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து, வல்லம் அனைத்து மகளிர் போலீசில் தாட்சர் புகார் செய்தார். புகாரை வாங்க போலீசார் மறுத்ததால் மதுரை ஐகோர்ட் உதவியை நாடினார். இதன்பேரில், வல்லம் போலீசார்  நடவடிக்கை எடுத்து எட்வின், அவரது தாய், தங்கை,  சித்தி, லீலைகளுக்கு உடந்தையாக செயல்பட்ட வங்கியில் பணியாற்றும் தேவிபிலோமினா ஆகிய 5 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்ததும் எட்வின் உள்ளிட்டோர் தலைமறைவாகிவிட்டனர்.இந்தநிலையில், கடந்த 16ம் தேதி தாட்சருக்கு, சாதாரண தபால் மூலம் எட்வின் 2 பக்க கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ‘என் மீது நீ சொல்லும் புகார் பொய்யானது. எதையும் மனதில் வைத்து கொள்ளாமல் என்னுடன் வந்துவிடு. நாம் இனி  எந்த பிரச்னையின்றி சந்தோஷமாக குடும்பம் நடத்துவோம்’ என்று எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து தாட்சர், அவரது வக்கீல் ஜீவக்குமாருடன் தஞ்சை எஸ்பி மகேஸ்வரனை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். அந்த மனுவில்,  ‘எட்வினின் செல்போனை ஆராய்ந்ததில் பல பெண்களுடன் பாலியல் ரீதியான தொடர்பு இருந்தது  தெரியவந்தது. இதுகுறித்து நான் கேட்டபோது கொலை செய்ய முயற்சித்தார். ஒரு தட்டச்சு செய்யப்பட்ட கடிதத்தை தபாலில் கையெழுத்திட்டு எட்வின் அனுப்பி இருந்தார். இது, அன்பான மிரட்டல் கடிதமாக உள்ளது. கணவரால் எனது உயிருக்கு ஆபத்து நேரிடும் என அஞ்சுகிறேன். எனவே எட்வினை கைது செய்து எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.  ,இதையடுத்து தலைமறைவான கேஷியரை போவீசார் தீவிரமாக தேடுகின்றனர்.

Tags : SP ,SB ,Petitioner , 40 women,wife ,bank cashier:
× RELATED பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க...