×

கைதியை கொன்ற சப் இன்ஸ்பெக்டர் ஆயுள் தண்டனை நிறுத்திவைப்பு

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்தவர் செய்யது முகம்மது (24). திருட்டு புகாருக்காக இவரை  எஸ்.பி.பட்டினம் போலீசார் கடந்த 14.10.2014ல் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது எஸ்ஐ காளிதாஸ் (36)  துப்பாக்கியால் சுட்டதில் செய்யது முகம்மது இறந்தார்.இந்த வழக்கில் எஸ்ஐக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து காளிதாஸ் தாக்கல் செய்த அப்பீல் மனுவை  ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் டி.ராஜா, பி.புகழேந்தி  ஆகியோர் விசாரித்து  ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்தனர்.Tags : Sub Inspector ,Killing the Prisoner Sub Inspector , Killing, Sub Inspector, Suspension
× RELATED மூதாட்டியை கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை