×

மாற்றுத்திறனாளி பெண்ணின் கருவை கலைக்க அனுமதி

மதுரை:  தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், 17 வயதான எனது மனநலம் பாதித்த, மாற்றுத்திறனாளி மகளை பக்கத்து வீட்டுக்காரர் பலாத்காரம் செய்ததில் 4 மாத  கர்ப்பிணியாக உள்ளார். கருவை கலைக்கவும், தேவையான சிகிச்சை அளிக்கவும், எங்கள் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

 இந்த மனு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது 24 வார கருவை கலைக்கலாம் என டீன் பரிந்துரைத்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  இதையடுத்து, கருவை கலைக்க அனுமதித்த  நீதிபதி, சிசுவின் டிஎன்ஏவை பாதுகாத்து வைக்க உத்தரவிட்டுள்ளார்.Tags : fetus , woman , Allow ,nucleus , dissolve
× RELATED நீதிபதி வீட்டில் திடீரென மயங்கி...