துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு மாநில வரி வருவாய் குறைப்பு: ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும்

சென்னை: மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ஏன் குறைந்துகொண்டு  வருகிறது என்பதை ஆராய குழு அமைக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது பதிலுரையில் தெரிவித்தார். அவர் கூறியதாவது: இந்த நிதிநிலை அறிக்கையில் ஒவ்வொரு துறைக்கும் பார்த்துப் பார்த்து, நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.  இரண்டு துணை மதிப்பீடுகள் மூலமாக ஏற்பட்ட கூடுதல் செலவு  மொத்தம் ரூ. 6,234.91 கோடி.  அதைத் தவிர மத்திய  அரசிடமிருந்து பெற  வேண்டிய மத்திய வரியின் பங்கில் குறைவு ஏற்பட்டதால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 7,586.07 கோடியாகும்.  ஆனால், செலவினங்களை ஓரளவிற்கு கட்டுப்படுத்தியதன் காரணமாகவும் மற்றும் மத்திய  அரசிடமிருந்து மானியங்கள் கூடுதலாக  வரப்பெற்றதன் காரணமாகவும், பற்றாக்குறையை  ஓரளவிற்கு கட்டுப்படுத்த முடிந்தது.  2015-2016  ஆம் நிதியாண்டிற்குப் பிறகு, மாநிலத்திற்கு வரக்கூடிய மத்திய வரிப் பகிர்வு 14-வது  நிதிக் குழுவின் பரிந்துரைகளினால் மிகவும் குறைந்தது. அனைத்து மாநிலங்களையும்விட தமிழ்நாட்டின் பங்குதான் 14 ஆம்  நிதிக்குழுவின்  பரிந்துரைகளினால் மிகவும் குறைந்தது. இதனால், ஏறத்தாழ மாநிலத்திற்கு ஆண்டொன்றிற்கு ரூ.6,000 கோடி  வரை நிதி இழப்புகள் ஏற்பட்டது.

ம த்திய அரசினுடைய 2020-2021 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில், மொத்த நிலுவைக்  கடன் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 48.70 சதவீதமாக இருக்கும் என மதிப்பிட ப்பட்டுள்ளது. 14-வது நிதிக் குழுவின் பரிந்துரைகளினால், தொடர்ந்து ஐந்து ஆண்டுகள்  தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பீட்டினாலும், உதய் திட்டம் செயல்படுத்தப்ப ட்டதன் மூலம், மின்சார வாரியத்தினுடைய  கடன்களையும் இழப்பை அரசே  ஏற்றுக் கொண்டதாலும், 2017-18 ஆம் ஆண்டு  அமலுக்கு வந்த சரக்கு மற்றும் சேவை வரி முறையினால் எற்பட்ட நிலையற்ற  தன்மையினாலும், மத்திய விற்பனை வரி இழப்பினை மத்திய அரசு சரிகட்டவில்லை  என்பதாலும், மாநிலத்தின்  நிதி நிலைமை பாதிக்கப்பட்டு, கடன் அளவு பெருகி வந்தது.  2020-21 ஆம் ஆண்டிற்கான 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் ஓரளவிற்கு தமிழ்நாட்டிற்கு  சாதகமாக அமைந்துள்ளன.  மேலும், செலவினங்களைக் கட்டுப்படுத்தவும்,  வரவினைங்களைப் பெருக்குவதற்கும் பல்வேறு சீர்திருத்த  நடவடிக்கைகளை எடுப்பது ப ற்றி நிதி நிலை அறிக்கையில் நான் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளேன்.   

 மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் மாநில சொந்த வரி வருவாய் குறைந்துக்கொண்டு வரும் போக்கை ஆராயும் வகையில், ஒரு நிபுணர் குழு  அமைக்கப்படும்.  இக்குழு  குறுகிய காலத்தில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும். 2020-2021 ஆம் ஆண்டு மத்திய வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளின்படி,  2019-2020 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூ.33,978.47 கோடியாக இருந்த மத்திய வரியின் மாநில அரசிற்கான பங்கு, 2019-2020 ஆம் ஆண்டு  திருத்த  மதிப்பீட்டில்  ரூ.26,392.40 கோடியாக  குறைக்கப்பட்டு இருப்பதால் வரி வருவாயில் பெரும்  பின்னடைவு ஏற்பட்டது. செலவினங்களைக் கட்டுக்குள் வைக்கவும், தேவையற்ற  செலவினங்களைக் கண்டறிந்து அவற்றை நீக்கவும்,ஆதிசேஷய்யா,  தலைமையில்  செலவின சீரமைப்புக் குழுவை அமைத்துள்ளது. அக்குழு அறிக்கையின் பேரில்  பல்வேறு  நடவடிக்கைகள் எடுத்து, வருவாய்ச் செலவினத்தையும், வருவாய்ப் ப ற்றாக்குறையையும் இடைப்பட்ட நிதி நிலவரத் திட்டத்தில்  கணிக்கப்பட்டதைவிட,  குறைக்க அனைத்து முயற்சிகளையும் அரசு எடுக்கும்.

 நிதிப் பற்றாக்குறையைப்  பொறுத்தமட்டில், அது அதிகரித்துவருகிறது என்ற ஒரு கருத்து இருந்துவருகிறது.  ஆண்டாண்டு விலைவாசி உயர்வது போலவும், சராசரி தனிநபர் வருமானம்  உயர்வது போலவும், மாநிலத்தின் மொத்த  உள்நாட்டு உற்பத்தி மதிப்பு உயர்வது  போலவும் நிதிப் பற்றாக்குறையும் உயர்வது இயல்புதான்.. 2019-2020 ஆம் ஆண்டின் திருத்திய மதிப்பீடுகளின்படி 2.97  சதவிகிதமாகவும், 2020-2021 ஆம் ஆண்டு வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளின்படி 2.85  சதவிகிதமாகவும் நிதிப் பற்றாக்குறை கட்டுப்படுத்தப்படும். இது 3 சதவிகிதம் என்ற   வரையறைக்கு உட்பட்டே இருக்கும். நிதிப் பற்றாக்குறை  இடைப்பட்ட கால நிதி நிலவரத் திட்டத்தில், 2021-2022 ஆம் ஆண்டில் 2.58  சதவிகிதமாகவும், 2022-2023 ஆம் ஆண்டில் 2.52 சதவிகிதமாகவும் கட்டுப்படுத்தப்படும்.   எனவே, வருவாய்ப்  பற்றாக்குறையும், நிதிப் பற்றாக்குறையும் இடைப்பட்ட கால  அளவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, தமிழ்நாட்டின் நிதிநிலை சீராகப்  பராமரிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: