இந்தியாவிலேயே சிறிய ஆயுதங்களை தயாரிக்க வேண்டும்: வைஸ் அட்மிரல் பேச்சு

புதுடெல்லி: சிறு ஆயுதங்கள் பற்றிய சர்வதேச கருத்தரங்கு டெல்லியில் நேற்று நடந்தது. இதில்  முப்படைகளின் தலைமை தளபதியின் கீழ் உள்ள ஒருங்கிணைப்பு குழு தலைவர் வைஸ் அட்மிரல் ஹரி குமார் பேசியதாவது:ராணுவத்தில் தற்போதைய மற்றும் அவசரத் தேவைகளுக்கான சிறிய ரக ஆயுதங்களை நாம் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம். சிறு ஆயுதங்கள் உற்பத்தியில் இந்தியா சுயசார்பு நாடாக இருக்க வேண்டியது அவசியம். அடிப்படை ஆயுதங்கள் எல்லாம் நம்நாட்டில் தயாரிக்கப்பட வேண்டும். புதிய ரக துப்பாக்கி ஒன்றை, தோட்டாக்களுடன் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்து வருகிறது. அது விரைவில் பரிசோதனைக்கு வரும் என நம்புகிறோம்.

நமது ராணுவத்துக்கு தேவையான நவீன துப்பாக்கிகள் கொள்முதல் விரைவாக நடந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் உ.பி அமேதியில், ரஷ்ய நிறுவனத்துடன் இணைந்து 6.7 லட்சம் ஏ.கே.203 ரக துப்பாக்கிகள் தயாரிக்கும் பணியும் நடக்கிறது. அடிப்படை ஆயுதங்கள் அனைத்தையும் நமது பிரதமர் கூறும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்க வேண்டும். ராணுவ கொள்முதலில் சீர்திருத்தம் தேவை. சிறு ஆயுதங்களை, இந்திய நிறுவனங்களுடன் கூட்டாக இணைந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றார்.

Related Stories: