×

ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சன் உள்ளிட்ட 4 ஐஜி, 8 டிஐஜிக்களுக்கு பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட 4 போலீஸ் ஐஜிக்கள் ஏடிஜிபிக்களாகவும், சர்ச்சைக்குறிய டிஐஜி கபில்குமார் சரத்கர் உள்ளிட்ட 8 டிஐஜிக்களுக்கு ஐஜியாக பதவி உயர்வும் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் சீனியாரிட்டி அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் பதவி உயர்வு வழங்கப்படும். அதில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். இதற்காக ஒவ்வொரு தகுதி(ரேங்க்)யிலும், அதிகாரிகளின் பட்டியலை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்புவார்கள். அவர்கள் அதில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகாதவர்களுக்கு பதவி உயர்வு அளிக்க அனுமதி அளிப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு, ஐபிஎஸ் அதிகாரிகளில், தகுதியுடையவர்களின்  பட்டியலை அனுப்பும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி கூடுதல் எஸ்பிக்கள் முதல் ஐஜிக்கள் வரை உள்ளவர்களின் பட்டியல் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் மத்திய உள்துறைச் செயலாளர் தலைமையில், பதவி உயர்வு வழங்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடந்தது. அதில் 43 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதில் இருந்து ஒவ்வொரு ரேங்க்(தகுதி)கிலும் உள்ள அதிகாரிகளுக்கு தமிழக அரசு பதவி உயர்வு வழங்குவதற்கான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதன்படி ஐஜிக்களாக உள்ள 4 பேருக்கு ஏடிஜிபியாக பதவி உயர்வு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் மதுரை போலீஸ் கமிஷனராக உள்ள டேவிட்சன் தேவாசீர்வாதம், மத்திய அரசுப் பணியில் உள்ள சந்தீப் மிட்டல், தெலங்கானா மாநிலத்துக்கு அயல்பணிக்காக சென்றுள்ள பாலநாகதேவி, காவலர் நலன் பிரிவு ஐஜி சேஷசாய் ஆகிய 4 பேருக்கும் ஏடிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு விரைவில் புதிய பணியிடங்கள் வழங்கப்படும்.

அதேபோல, தஞ்சை டிஐஜி லோகநாதன், வடசென்னை இணை கமிஷனர் கபில்குமார் சரத்கர், உள்நாட்டு உளவுத்துறை டிஐஜி கண்ணன், விழுப்புரம் டிஐஜி சந்தோஷ்குமார், காஞ்சிபுரம் டிஐஜி தேன்மொழி, கோவை டிஐஜி கார்த்திகேயன், திண்டுக்கல் டிஐஜி ஜோஷி நிர்மல் குமார், கடலோர காவல்படை டிஐஜி பவானீஸ்வரி ஆகிய 8 பேருக்கு ஐஜிக்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது எஸ்பிக்களாக உள்ள சரவணன்(கடலூர்), சேவியர் தன்ராஜ்(மத்திய குடிமைப் பணி), பிரவேஷ்குமார், அனில்குமார் கிரி, பிரபாகரன், கயல்விழி, சின்னச்சாமி ஆகிய 7 போலீஸ் அதிகாரிகளுக்கு சீனியர் எஸ்பி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு விரைவில் டிஐஜி பதவி உயர்வு அளிக்கப்படும். இந்தப் பதவி உயர்வைத் தொடர்ந்து மற்ற ரேங்கில் உள்ள அதிகாரிகளுக்கும் விரைவில் பதவி உயர்வு வழங்கப்படும்.

Tags : IG ,Davidson ,IPS ,Govt. 4 IG ,officer , IPS Officer Davidson, 4 IG, 8 DIG, Promoted, Govt
× RELATED அதிகாரிகள் தவறு செய்தால் தேர்தல்...