×

தேனி அருகே குடியிருப்பு பகுதியில் தேங்கி கிடக்கும் கழிவுநீர்: அதிகாரிகள் கவனிப்பார்களா?

தேனி: தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் கழிவுநீர் கடத்த வழியில்லாததால் ஒர்க் ஷாப் நகர் நகரில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் கொசுத்தொல்லையால் இப்பகுதி மக்கள் பரிதவித்து வருகின்றனர். தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ளது ஒர்க் ஷாப் நகர். இங்கு நுாற்றுக்கணக்கான குடியிருப்புகளும், ஒர்க் ஷாப்களும் உள்ளன. இங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் மெயின் ரோட்டிற்கு வந்து அங்கிருந்து கொட்டகுடி ஆற்றில் கலந்து வந்தது.
முறையான பராமரிப்பு வசதிகள் இல்லாததால் இந்த சாக்கடை முழுமையாக மூடப்பட்டு விட்டது. இதனால் ஒர்க் ஷாப் நகரில் இருந்து கழிவுநீர் வெளியேற வழியில்லை.

சாக்கடை முழுக்க தேங்கி நிற்கிறது. பல நாட்கள் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது.கொசுத்தொல்லை அதிகம் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இது குறித்து பழனிசெட்டிபட்டி பேரூராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது,‘‘ஒர்க் ஷாப் நகர், தென்றல் நகரில் பாதாள சாக்கடைக்கு குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. இப்பணிகள் நிறைவடைந்தால் கழிவுநீர் முழுமையாக பாதாள சாக்கடையுடன் இணைக்கப்பட்டு விடும். அதன் பின்னர் இந்த பிரச்னை இருக்காது. தற்காலிகமாக கழிவுநீரை தேங்க விடாமல் வெளியேற்ற முயற்சி செய்து வருகிறோம்’’என்றனர்.

Tags : area ,Theni , Theni, sewer
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...