நாளை உலக தாய்மொழி தினம்: 22 மொழிகளில் பேசி கலக்கிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு...நெகிழ்ந்த பார்வையாளர்கள்

டெல்லி: டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு 22 மொழிகளில் பேசி அசத்தியுள்ளார். 1952-ல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக  அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூறப்பட்டு சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

அனைத்துலக அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெசுக்கோ அமைப்பு ) 1999-ம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் திகதி நடைபெற்ற பொது மாநாட்டில் இந்நாளை அனைத்துலக தாய்  மொழிநாளாக அறிவித்தது. பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்த நாளை யுனெஸ்க்கோ அறிவித்தது.

2000-ம் ஆண்டு முதல் இந்நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இந்த வருடம் உலக தாய்மொழி தினம் பிப்ரவரி 21 நாளை அனுசரிக்கப்படுகிறது. உலக தாய்மொழி தினம் தொடர்பாக டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு,   22 மொழிகளில் பேசி தமது பன்மொழித் திறனை வெளிக்காட்டினார். அனைத்து இந்தியர்களும் தத்தம் தாய்மொழியை வளர்ப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்வதுடன், பிற மொழிகளையும் கற்றுக் கொள்ள முன்வரவேண்டும் என கேட்டுக்  கொண்டார்.

இந்திய மொழிகளை வளர்க்க தேசிய அளவிலான இயக்கம் நடத்தப்பட வேண்டும் என்றும் தாய்மொழியை பாதுகாத்து வளர்ப்பதன் மூலம் நமது பன்முகத் தன்மை கொண்ட கலாச்சாரத்தையும் வளர்க்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.  பள்ளி இறுதி வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கற்பதை சட்டமாக்கலாம் என்பதும் அவரது எண்ணம் என்றும் தெரிவித்தார்.

Related Stories: