விளைச்சல் குறைவால் ரோஸ் பூக்கள் விலை உயர்வு: கிலோ ரூ150க்கு விற்பனை

சேலம்: சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, ஊசிமல்லி, கோழிக்கொண்டை, அரளி, சாமந்தி, சம்பங்கி, காக்கட்டான், கனகாம்பரம், ரோஜா உள்பட பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. குறிப்பாக, பனமரத்துப்பட்டி, ஜல்லூத்துப்பட்டி,  கம்மாளப்பட்டி, குரால்நத்தம், சாமகுட்டப்பட்டி, தும்பல்பட்டி ஆகிய  பகுதிகளில் பட்டு ரோஸ், பன்னீர் ரோஸ் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த பகுதியில் பறிக்கப்படும் பூக்கள் சேலம் வஉசி பூ மார்க்கெட், பெங்களூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் ரோஸ் பூக்களின் விளைச்சல் குறைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரூ30 முதல் ரூ40க்கு விற்ற ரோஸ் பூக்களின் விலை  அதிகரித்து இன்று காலை நிலவரப்படி ரூ150 என உயர்ந்துள்ளது. மழை இல்லாததால் ரோஸ் விளைச்சல் குறைந்தது தான் விலை உயர்வுக்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: