×

4 ஏ.டி.ஜி.பி.,8 ஐ.ஜி, 7 டி.ஐ.ஜி. .. ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு

சென்னை : தமிழகத்தில் டி.ஐ.ஜி.க்களாக இருந்த 8 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஐ.ஜியாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதே போல் 2007ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஏழு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஐஜி அந்தஸ்து வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி

தமிழக போலீசில் உள்ள அதிகாரிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு டிஐஜி, ஐஜி பதவியில் உள்ள ஐபிஎஸ்  அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்து வந்தது.இதையடுத்து 2020 – 21ம் ஆண்டிற்கான ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குதல் குறித்து தமிழக அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டிருந்தது. அதுகுறித்து பட்டியல் ஒன்றை தயாரித்து உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்திருந்தது. இதையடுத்து தமிழகத்தில் 43 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பதவி உயர்வுக்கு மத்திய உள்துறை அமைச்சகமும் அனுமதித்துள்ளது.

ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

இந்த நிலையில் உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்த உத்தரவில், தற்போது ஐ.ஜி., அந்தஸ்தில் உள்ள டேவிட்சன் தேவாசிர்வாதம், சந்திப் மிட்டல், பாலநாகதேவி, சேசசாயி ஆகியோருக்கு ஏ.டி.ஜி.பி., அந்தஸ்து வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். இந்த 4 ஐபிஎஸ் அதிகாரிகளும் 1995ம் ஆண்டு பேட்ச் அதிகாரிகளாக இருக்கிறார்கள். அதே போல் 2007ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஏழு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஐஜி அந்தஸ்து வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி சரவணன், சேவியர் தனராஜ், பிரவேஷ்குமார், அனில்குமார் கிரி, பிரபாகரன், கயல்விழி, சின்னசுவாமி ஆகியோருக்கு டிஐஜி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் 8 டி.ஐ.ஜி.க்களுக்கு ஐ.ஜியாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. லோகநாதன், கபில்குமார், கண்ணன், சந்தோஷ்குமார், தேன்மொழி, கார்த்திகேயன். ஜோஷி நிர்மல்குமார், கே.பாவனீஸ்வரி ஆகியோரும் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெறுகின்றனர்.
இவர்களுக்கு விரைவில் பதவி உயர்வு வழங்குவதற்கான அரசாணை வெளியிட்டு, புதிய பணியிடங்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகின்றது.

Tags : IG ,Govt. 4 ATGP ,Tamil Nadu ,Govt ,IPS Officers , IPS, Officials, Home Secretary, SK Prabhakar, Promotion, ADGP
× RELATED அதிமுக ஆட்சியில் போலி அனுமதி எண்...