இளம்பெண் சாவில் திருப்பம்; கள்ளக்காதலியை கொடூரமாக கொன்று தூக்கில் தொங்கவிட்ட வாலிபர் கைது: உடந்தையாக இருந்த நண்பரும் சிக்கினார்

காவேரிப்பட்டணம்: கள்ளக்காதலியை கொடூரமாக கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட நிப்பெட் கம்பெனி உரிமையாளர் கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த அவரது நண்பரும் போலீசில் சிக்கினார். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் கரடிஅள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட சுருளி அள்ளியை சேந்தவர் மாதேஸ் (35) லாரி டிரைவர். இவரது மனைவி நதியா (29). இவர், சப்பாணிபட்டியில் உள்ள நிப்பெட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மாதேஸ் லாரியில் சரக்கு ஏற்றிக் கொண்டு ஆந்திராவுக்கு சென்றுவிட்டார். வழக்கம் போல் கடந்த 13ம் தேதி காலை நதியா வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வந்தார். இரவு வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் சடலமாக கிடந்தார். இந்த தகவலின் பேரில், காவேரிப்பட்டணம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நதியாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், சக்திவேல் (30) என்பவர் நதியா இறப்பிற்கு காரணமாக இருக்கக்கூடும் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனிடையே, நதியாவின் பிரேத பரிசோதனை அறிக்கையும் போலீசாருக்கு கிடைத்தது. அதில் நதியா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து சக்திவேலை தேடிவந்தனர். இந்நிலையில், சக்திவேல் போலீசில் சிக்கினார். அப்போது நதியாவை நான் தான் கொன்றேன் என்று ஒப்புக் கொண்டார். போலீசார் அவரை கைது செய்தனர். போலீசில் அவர் அளித்த வாக்குமூலம்: நான், கும்பாரஅள்ளி ரோட்டில் நிப்பெட் கம்பெனி நடத்தி வருகிறேன். எனது கம்பெனியில்,நதியா ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவருக்கும் எனக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. நதியாவின் கணவர் லாரி டிரைவர் என்பதால் வெளியூர்களுக்கு சென்றவுடன், நான் இரவு நேரத்தில் அவர் வீட்டுக்கு சென்று உல்லாசமாக இருப்பேன்.

இந்நிலையில் எனக்கு வீட்டில் கடந்த 3 கால மாதமாக பெண் பார்த்துக் கொண்டிருந்தனர். இது பற்றி நதியாவுக்கு தெரியவந்தது. இதனால் 2 பேருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. என்னிடம் வேறு யாரையும் திருமணம் செய்யக்கூடாது என நதியா கூறினார். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவத்தன்று இரவு நதியாவின் வீட்டிற்கு சென்றேன். அவரை அடித்து கீழே தள்ளி நெஞ்சின் மீது காலால் அமுக்கியும், வாயை தலையணையால் அமுக்கியும் கொலை செய்தேன். பின்னர் நானும், எனது நண்பர் பாலமுருகனும் (23) சேர்ந்து நதியாவின் உடலை தூக்கில் தொங்க விட்டோம். இவ்வாறு சக்திவேல் போலீசாரிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பாலமுருகனையும் போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்து போலீசார் கொலையாளிகள் சக்திவேல், பாலமுருகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் நேற்று அடைத்தனர்.

நதியாவின் கணவர் லாரி டிரைவர் என்பதால் வெளியூர்களுக்கு சென்றவுடன், நான் இரவு நேரத்தில் அவர் வீட்டுக்கு சென்று உல்லாசமாக இருப்பேன். இந்நிலையில் எனக்கு வீட்டில் கடந்த 3 கால மாதமாக பெண் பார்த்துக் கொண்டிருந்தனர். இது பற்றி நதியாவுக்கு தெரியவந்தது. இதனால் 2 பேருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.

Related Stories: