சென்னையில் நாளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுக் குழுக் கூட்டம்: ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ அறிவிப்பு

சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுக் குழுக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெறுகிறது. அண்ணாநகர் விஜயஸ்ரீ மகாலில் 28-வது பொதுக்குழு நடைபெற உள்ளதாக ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Advertising
Advertising

மாநிலங்களவை உறுப்பினராக தி.மு.க சார்பில் சண்முகம், வில்சன் மற்றும் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் போட்டியிட்டனர். அதேபோல் அ.தி.மு.க சார்பில் முகம்மது ஜான், சந்திரசேகரன் மற்றும் பா.ம.க.வின் அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர். பின்னர் மாநிலங்களவையில் காஷ்மீர் பிரச்சனை, குடியுரிமை திருத்தத்துக்கு எதிராக தீர்மானம் போன்ற பல்வேறு சட்டங்களுக்கு எதிர்ப்பினை தெரிவித்து வந்துள்ளார்.

குடியுரிமை திருத்தத்துக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற கூறி தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்பினைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ம.தி.மு.க. 28-வது பொதுக்குழு கூட்டத்தை நாளை காலை 10 மணிக்கு நடத்த போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

Related Stories: