வண்ணாரப்பேட்டையில் 6வது நாளாக போராட்டம் அமெரிக்க அதிபருக்கு எதிராக கறுப்புக்கொடி: போராட்டக்காரர்கள் அறிவிப்பு

சென்னை: வண்ணாரப்பேட்டையில் நேற்று 6வது நாளாக குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்டவற்றை நீக்க வலியுறுத்தி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 24ம் ேததி இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு எதிராக  கரும்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்துவோம் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை நீக்க வலியுறுத்தி, கடந்த 14ம் தேதி வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினர் கண்டன  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் பங்கேற்றனர்.

Advertising
Advertising

இங்கு கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதால், இஸ்லாமியர்களின் போராட்டம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.இதைத் தொடர்ந்து பழைய  வண்ணாரப்பேட்டை, மண்ணடி ஆகிய பகுதிகளில் கடந்த 5 நாட்களாக பெண்கள் உள்பட ஏராளமான இஸ்லாமியர்களின் போராட்டம் இரவுபகலாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில், 6-வது நாளாக நேற்றும் இஸ்லாமியர்களின் கண்டன கோஷங்களுடன் போராட்டத்தை தொடர்ந்தனர். வரும் 24ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வரும்போது, அவருக்கு எதிராக கறுப்புக்கொடி ஏந்தி, இஸ்லாமியர்களின்  சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என போராட்டக் குழுவை சேர்ந்த ஒருவர் கூறினார்.நடிகர் மன்சூர் அலிகான் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

Related Stories: