சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் கேரள முதல்வர் விஜயன் பங்கேற்பு: ஜி.ராமகிருஷ்ணன் தகவல்

சென்னை: ராயப்பேட்டையில் நடக்கும் சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்பார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது: விடா முயற்சியோடு போராடி வரும் இஸ்லாமியர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.  உங்களுக்கு உறுதுணையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கும். இந்த சட்டத்தை கேரளாவில்  அமல்படுத்த மாட்டோம் என்று கூறிய முதல் முதலமைச்சர் பினராயி விஜயன் மட்டும்தான்.

 மக்கள் கணக்கெடுப்பு எடுக்க வரும்போது 21 கேள்விகள் இருக்கும். அதில் ஒரு கேள்வி தந்தையின் பிறந்த தேதி மற்றும் தந்தையின் பிறந்த ஊரை கூற வேண்டும். என்பிஆர்  கணக்கெடுப்பை முதல்வர் உடனடியாக நிறுத்த வேண்டும்.  ஏனென்றால், அது அவரையும் பாதிக்கும். மக்களை பிளவுபடுத்தும் முயற்சியில் மோடி அரசு செயல்பட்டு வருகிறது.  இதனை ஒருபோதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனுமதிக்காது. வரும் 26ம் தேதி இந்த சட்டங்களுக்கு எதிரான  மாபெரும் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ  மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்டு பேச உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: