இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் வழக்கு விசாரணை மே 4ம்தேதிக்கு ஒத்திவைப்பு: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இரட்டை இலை சின்னத்தைப் பெற தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ₹50கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா உள்ளிட்ட மொத்தம் ஒன்பது பேர் கடந்த 2018ம் ஆண்டு  கைது செய்யப்பட்டனர்.

Advertising
Advertising

இதையடுத்து டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதில் டிடிவி.தினகரன் தற்போது ஜாமீனில் வெளியில் உள்ளார். இதில் ஹவாலா புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர்  மட்டும் தற்போது வரை சிறையில் உள்ளார். அவர் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்கு நிலுவையில் உள்ளதால் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து வருகிறது. இந்நிலையில் இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது தொடர்பான  வழக்கு டெல்லி ரோஸ் அவனீவ் நீதிமன்ற சிறப்பு நீதிபதி அஜய் குமார் குகர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து வழக்கை வரும் மே 5ம் தேதிக்கு ஒத்திவைத்து அவர் உத்தரவிட்டார்.

Related Stories: