சிவானந்தா குருகுல நிறுவனர் ராஜாராம் காலமானார்

சென்னை: சிவானந்தா குருகுல நிறுவனர் (67) ராஜாராம் காலமானார். சென்னை அருகே காட்டாங்கொளத்தூரில் சிவானந்தா குருகுலம் செயல்பட்டு வருகிறது.  1974ம் ஆண்டு முதல் இதன் பொதுச்செயலாளராக இருந்து வந்தவர் டாக்டர் ராஜாரம், கடந்த சில மாதங்களாக உடல்நிலை குறைவால்  பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், ராஜாராம், சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இரவு உயிரிழந்தார். குருகுலத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். லட்சுமி என்ற மனைவியும், கிஷோர்குமார்  ராஜேஷ் ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். ராஜாராமின் சேவையை பாராட்டி, மத்திய அரசு அவருக்கு கடந்த 2002ம் ஆண்டு மத்திய அரசு  பத்ம விருது வழங்கி கவுரவித்துள்ளது குறிப்பிடத்தது.

Related Stories: