×

குடியை கெடுக்கும் குடியுரிமை திருத்த சட்டம் அதிமுகவுக்கு வரலாறு இல்லாத நிலையை மக்கள் உருவாக்குவார்கள்: எதிர் கட்சி தலைவர்கள் பேச்சு

சென்னை: குடியுரிமை சட்டம் இந்திய மக்களின் குடியை கெடுக்கும் என்றும் பாஜக போன்று அதிமுகவுக்கு தமிழகத்தில் வரலாறு இல்லாத நிலையை மக்கள் உருவாக்குவார்கள் என்றும் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி எதிர்ப்பு பேரணியில் தலைவர்கள் பேசினர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், என்பிஆர் மற்றும் என்சிஆர் பதிவேடு ஆகியவற்றை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற  கோரியும் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா  சபை தலைமையில் 25க்கு மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் சட்டமன்ற  முற்றுகை போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைத்து  கட்சி தலைவர்கள் பேசியது பின்வருமாறு : வி.பி.துரைசாமி (திமுக துணை பொதுச் செயலார்): சிஏஏ, என்பிஆர், என்சிஆர் ஆகியவற்றுக்கு எதிராக 2 கோடி கையெழுத்துகளை பெற்று குடியரசுத் தலைவரிடம் வழங்கி உள்ளோம். திமுக எப்போதும் உங்களுடன் இருக்கும். பிரின்ஸ் (காங்கிரஸ் எம்எல்ஏ) : இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும். நாட்டில் ஆழ்ந்த இருள் நிலவுகிறது. நாட்டில் இருந்து இருளை விரட்ட வேண்டும். அதை விரட்ட இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் துணை நிற்கும்கனகராஜ்(சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்): அரசியல் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியாமல்  மக்களின் கோரிக்கைகளை ஏற்று நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே சிஏஏ,  என்ஆர்சி, என்பிஆர்க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற  முதலமைச்சர் நடவடிக்கை  எடுக்க வேண்டும்.

வீரபாண்டியன் (சிபிஐ மாநில துணைச் செயலாளர்): என்ஆர்சி என்பிஆர் இந்திய மக்களுக்கு எதிரானது. மக்கள் விரோத ஆட்சியாளர்களை அடித்து விரட்டும் வரை இடதுசாரிகள் ஓயமாட்டார்கள்.வன்னி அரசு (விசிக ):இந்த சட்டம் ஜனநாயகத்திற்கு, மதச்சார்பின்மைக்கு, அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.அபுபக்கர் (ஐயுஎம்எல் எம்எல்ஏ): சிஏஏ சட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர முயன்றதை நிராகரித்த சபாநாயகர் தனபாலை மற்றும் அதிமுகவை தமிழக மக்கள் நிராகரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. சிஏஏ சட்டத்துக்கு எதிரான  போராட்டம் தொடரும்.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்): சிஏஏ, என்பிசி, என்பிஆர் எதிர்ப்புப் பேரணியை வெற்றிகரமாக நடத்தி வரும் இஸ்லாமிய அமைப்பினருக்கு வாழ்த்துக்கள். எவ்வளவு அடக்குமுறைகளை ஏவினாலும் அதை எதிர்கொள்ளும்  சிங்கக் கூட்டம் இது. அதிமுக, பாமக ஆகிய 11 ஓட்டுகள் ஆதரித்து போட்டதால் இன்று நாம் வீதியில் உள்ளோம். தமிழக முதலமைச்சர் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டம் ஓயாது.

தமிமுன் அன்சாரி (மஜக எம்எல்ஏ): இரண்டாவது சுதந்திர போராட்டத்தை நடத்தி கொண்டு இருக்கிறோம். மத்தியில் 2024 ஆட்சி முடியும் வரை போராடுவோம். துப்பாக்கி தோட்டாக்களுக்கு பயப்படாமல் தொடர்ந்து போராடுவோம்.நெல்லை முபாரக் (எஸ்டிபிஐ தலைவர்): அமித்ஷாவை ஒரு அடி கூட நடைமுறை படுத்தாமல் முன்னேறி கொண்டு வருவோம். தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி யாருக்கும் பாதிப்பில்லையென நிரூபித்தால் அத்தனை சொத்துக்களை எழுதி  தருவோம். சட்டமன்ற உள்ளேயும், முதலமைச்சர் இல்லத்தையும் முற்றுகை போராட்டம் நடத்துவோம்.ஜவாஹிருல்லா (மமக தலைவர்): சிஏஏவின் தலைவாசல் என்பிஆர். ₹500 நோட்டை போல இந்தியர்களை செல்லாதவர்களாக ஆக்கும் சிஏஏ திட்டத்தை செயல்படுத்த மோடி துடிக்கிறார்.


Tags : state ,opposition party leaders ,AIADMK ,Opposition leaders ,Citizenship Amendment Act People Will Make AIADMK No History , Citizenship Amendment Act,AIADMK,leaders talk
× RELATED பணம் கொடுக்கும் கட்சிகள் மீது...