×

‘திமுககாரன் விடமாட்டான்’னு எங்களை காட்டி நிதி கேளுங்கள்: துரைமுருகன் பேச்சு

சென்னை: எதிர்க்கட்சித்துணைத் தலைவர் துரை முருகன் பேசியதாவது: கடந்த முறை ரூ.1,50 லட்சம் கோடி கடன் சுமை இருந்தது, அதை சமாளிக்க முடியவில்லை என்று கூறும் நீங்கள் தற்போது ரூ.4.50 லட்சம் கோடியை எப்படி  சமாளிப்பீர்கள்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி: அப்படிப்பட்ட நிலை வராது. அன்று ரூ.1 லட்சம் கோடியின் மதிப்பும் இப்போது ரூ.4.50 லட்சம் கோடியின் மதிப்பும் சமம். அன்று பணத்தின் மதிப்பு வேறு; இன்றைய பணத்தின் மதிப்பு வேறு. துரைமுருகன்:. நிதிநிலை சிக்கலாக இருப்பதால் ‘கேட்கிறோம்’, ‘பேசுகிறோம்’ என்று கூறும் நீங்கள் ஏன் ‘Fight’ பண்ணக்கூடாது? நாங்கள் இருக்கிறோம், எங்களை காட்டுங்கள்.

 திமுக காரர்கள் விடமாட்டார்கள் என்று எங்களை காட்டி நிதியை  வாங்க வேண்டியதுதானே?முதல்வர் எடப்பாடி பழனிசாமி: 14,15வது நிதிக்குழக்களின் பாதிப்புகளை மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லி இருக்கிறோம். சில திருத்தங்களையும் மத்திய அரசு கொண்டு உ?உவந்துள்ளது. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். துரைமுருகன்:  மதுரவாயல் துறை முகத்தை ஏன் எடுக்கவில்லை. அதில் காழ்ப்புணர்ச்சி ஏன்?முதல்வர்: மதுரவாயல் திட்டத்தில் சில திருத்தங்கள் செய்து, மாற்றி அமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அதன் நீளத்தையும் தற்போது அதிகரித்துள்ளோம்.

7 பேர் விடுதலை எப்போது?
துரைமுருகன்: மனிதாபிமான அடிப்படையில் கேட்கிறேன். சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட நபர்களை விடுதலை செய்வதில் ஆளுநருக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அமைச்சர் சி.வி.சண்முகம்: தமிழக அரசுக்கு என்ன அதிகாரம் இருக்கிறதோ அதை பயன்படுத்தி கருத்து அனுப்பிவிட்டோம். ஆளுநரின் அதிகாரம் பற்றி  எந்த உத்தரவும் போடவில்லை.
துரை முருகன்: 28 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டனர். மனிதாபிமான அடிப்படையில் ஆளுநரிடம் எந்த வகையில் பேச வேண்டுமோ அந்த வகையில் பேசி காரியத்தை செய்ய வேண்டும்.
முதல்வர்: அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மத்திய அரசும் ஆளுநர் முடிவு எடுக்கலாம் என்று கூறியுள்ளது. ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.


Tags : Duraimurugan , Show,ask ,funds, Duraimurugan talk
× RELATED திமுக என்பது கொள்கை கூடாரம் அதை...