×

அம்மாவை மறந்து விட்டீர்களா?: காங்கிரஸ், அதிமுக இடையே காரசார விவாதம்

சென்னை: அம்மா உணவகங்கள் ஒழுங்காக செயல்படவில்லை, அம்மாவை மறந்து விட்டீர்களா? என்று காங்கிரஸ் எம்எல்ஏ கேட்டது சட்டசபையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி : அம்மா உணவகங்கள் பல இடங்களில் ஒழுங்காக செயல்படவில்லை. அம்மாவை மறந்து விட்டீர்களா என்ற சந்தேகம்.  ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் எஸ்பி.வேலுமணி : . அம்மா உணவகம் எங்கும் நிறுத்தப்படவில்லை. எல்லா இடங்களில் அம்மா உணவகம் நடக்கிறது. அம்மா உணவகத்துக்கு இந்த பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் உதயகுமார் : இன்றைக்கு கூட பெண்ணினத்திற்காக உழைத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளான 24ம் தேதி பெண் குழந்தை பாதுகாப்பு நாளாக முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார்.
கேஆர்.ராமசாமி : காரைக்குடி தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது என்று தான் சொன்னேன். உணர்ச்சிவசப்பட்டு பேச வேண்டாம்.
முதல்வர் எடப்பாடி : நீங்கள் தான் உணர்ச்சிவப்பட்டு பேசுகிறீர்கள். நீங்கள் தான் உங்கள் அம்மாவை மறந்து போய் பேசுகிறீர்கள். நாங்கள் மறக்கவில்லை.
கே.ஆர்.ராமசாமி : குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் நகராட்சி பகுதிகளில் போலீசார் அடையாளம் காட்டும் இடங்களில் கேமரா பொருத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வர் எடப்பாடி : சென்னை மாநகராட்சி உட்பட பல நகரங்களில் 2.50 லட்சம் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் படிப்படியாக குற்றச் சம்பவம் குறைந்து வருகிறது.
கே.ஆர்.ராமசாமி : டிஎன்பிஎஸ்சியில் முறைகேடு நடக்கிறது. ஆசிரியர், நீட் தேர்வில் நடந்தது. தமிழகத்தில் நடப்பதற்கு நீங்கள் தான் பொறுப்பு. இந்த தவறு எப்படி வருகிறது.
அமைச்சர் செங்கோட்டையன் : ஆசிரியர் தேர்வு வாரியத்தில் எந்த தவறு நடந்தது என சொன்னால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அப்படி ஒரு தவறு நடைபெறவில்லை. நீட் தேர்வு குறித்து மத்திய அரசிடம் கேளுங்கள்.
அமைச்சர் ஜெயக்குமார் : 6,300 சென்டர்களில் 2 ெசன்டர்களில் முறைகேடு நடந்ததை உடனடியாக கண்டிபிடித்து நடவடிக்கை எடுத்ததே எங்கள் அரசு தான்.



Tags : AIADMK ,Congress , Forgot ,mother ,argument, between
× RELATED பணப்பட்டுவாடாவை தடுக்கவில்லை!:...