×

உபி.யில் உன்னாவ் பாணியில் மீண்டும் ஒரு அதிர்ச்சி ஓட்டலில் அடைத்து விதவையை பலாத்காரம் செய்த பாஜ எம்எல்ஏ

* ஒரு மாதமாக நடந்த அட்டூழியம் 7 பேர் மீது வழக்குப் பதிவு

படோஹி : உத்தர பிரதேசத்தில் விதவைப் பெண்ணை ஒரு மாதம் ஓட்டலில் சிறைவைத்து பலாத்காரம் செய்த பாஜ எம்எல்ஏ உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், படோஹி பகுதியை சேர்ந்த விதவைப்பெண் ஒருவர் கடந்த 10ம் தேதி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது: படோஹி தொகுதி பாஜ எம்எல்ஏ.வாக இருப்பவர் ரவீந்திர நாத் திரிபாதி. இவருடைய மருமகன் சந்தீப் திவாரி, கடந்த 2016ம் ஆண்டு என்னை முதலில் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்காமல் இருந்தால் என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார். இதை நம்பி எனது புகார் மனுவை வாபஸ் பெற்றேன். இதை தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டு நடந்த உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலின்போது சந்தீப் திவாரி, ரவீந்திர நாத் திரிபாதி உள்பட 7 பேர் என்னை ஒரு மாதம் ஓட்டலில் சிறைவைத்து தொடர்ந்து பலாத்காரம் செய்தனர்.

இதில் கர்ப்பமான என்னை வற்புறுத்தி கருக்கலைப்பு செய்தனர். இது தொடர்பாக எம்எல்ஏ ரவீந்திரநாத் திரிபாதி உள்ளிட்ட 7 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் எம்எல்ஏ உள்பட 7 பேர் மீது படோஹி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பெண்ணிடம் மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் பெறப்பட்டு அதன்படி, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும், என்று எஸ்பி ரவீந்திர வர்மா தெரிவித்துள்ளார். ஏற்கனவே இம்மாநிலத்தில் உன்னாவ் கிராமத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த பாஜ எம்எல்ஏ குல்தீப் செங்காரின் பதவி பறிக்கப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Baja MLA ,widow ,rapes ,UP , Baja MLA rapes, widow in UP
× RELATED பிறந்தநாள்... இன்று பிறந்தநாள் மக்களை...