×

ஐஎன்எக்ஸ் மீடியா 6 அதிகாரிகளுக்கு ஜாமீன்

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐ கைது செய்தது. 105 நாட்களுக்கு பின்னர் அவர் ஜாமீன் பெற்றார். இந்த வழக்கில், ப.சிதம்பரத்தின் கீழ் பணியாற்றிய நிதியமைச்சக உயர் அதிகாரிகளான முன்னாள் நிதி ஆயோக் சிஇஓ சித்து குல்லார் உள்ளிட்ட 6 பேரை சிபிஐ கைது செய்திருந்தது. அவர்கள் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனு, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து அவர்களுக்கு ஜாமீன் வழக்கில் சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹார் உத்தரவிட்டார்.

Tags : INX Media 6 , Bail , INX Media, 6 officers
× RELATED சமூக இடைவெளியை கடைபிடிக்காத...