குடும்பத்தோடு தலைமறைவானவருக்கு வலைவீச்சு வாட்ஸ் அப்பில் ஆபாச மெசேஜ் அனுப்பி வங்கிக்கு வந்த பெண்களை மயக்கிய கேஷியர்

* ஒரு பெண் கொல்லப்பட்டதாகவும் சந்தேகம்

* பரபரப்பு தகவல்கள் அம்பலம்

தஞ்சை: வங்கிக்கு பணம் எடுக்க, செலுத்த வந்த பெண் வாடிக்கையாளர்களின் வங்கி பாஸ்புக்கின் செல்போன் நம்பருக்கு ஆபாச எஸ்எம்எஸ், வாட்ஸ் அப் அனுப்பி வலையில் சிக்க வைத்துள்ளார். இதில், திருமணமானவர்களே அதிகமாக மயங்கி உள்ளனர். இவர்களில் ஒரு பெண் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. இதுபோன்ற திடுக் தகவல் அம்பலமானதால், தலைமறைவான வங்கி காசாளர் குடும்பத்தை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான்தெருவை சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார் (36). புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள இந்தியன் வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறார். இவரது தாய் லில்லிஹைடா, தங்கை கேத்ரின் நிர்மலா, அவர்களது உறவுக்கார பெண் ரீட்டா ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இவரது தந்தை பல ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.

எட்வினுக்கும், தஞ்சை வல்லம் அருகே ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த தாட்சர் (32) என்பவருக்கும் கடந்தாண்டு டிசம்பர் 2ம் தேதி திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து இருவருக்கும் மாப்பிள்ளை வீட்டில் முதலிரவு நடந்தது. அப்போது மனைவியுடன் தாம்பத்ய உறவை தவிர்த்து தனி அறையில் கணவர் செல்போனில் விடிய விடிய பேசிக் கொண்டு இருந்துள்ளார். இதேபோல் தினம்தோறும் தனி அறையில் பேசி வருவது தாட்சருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஒருநாள் அவரது அறைக்கு வெளியே நின்று கேட்டபோது அவர் ஆபாசமாக செல்போனில் பேசுவது அறிந்து தாட்சர் அதிர்ச்சியடைந்தார்.

இதைதொடர்ந்து கணவர் வேலைக்கு சென்றவுடன், அவரது அறையை மனைவி சோதனையிட்டபோது, 15  செல்போன்கள் இருந்தது. அதில் வங்கி வாடிக்கையாளர்கள் உட்பட 40 பெண்கள் நிர்வாண படங்கள், பல பெண்களை அவர்களுக்கு தெரியாமல் எடுத்த ஆபாச புகைப்படங்கள் மற்றும் பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோக்கள் இருந்தது. மேலும் வாட்ஸ்அப்பில் பல பெண்களை உல்லாசத்துக்கு வற்புறுத்தும் குறுஞ்செய்திகள் இருந்தது. இதுதவிர, எட்வின் பாத்ரூமில் நிர்வாணமாக நின்றபடி பல பெண்களுடன் வீடியோ கால் பேசி செல்போனில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து கணவரிடம் கேட்டபோது, கொலை செய்து விடுவதாக மிரட்டியதோடு நீ குளிக்கும்போது தெரியாமல் எடுத்த வீடியோ, புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று எட்வின் மிரட்டியுள்ளார். அவரது குடும்பத்தாரிடம் தாட்சர் கூறியும் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, வல்லம் அனைத்து மகளிர் போலீசில் தாட்சர் புகார் செய்தார். ஆனால் அந்த புகாரை போலீசார் வாங்க மறுத்தனர். இதன்பின், மதுரை ஐகோர்ட்டின் உதவியை நாடி, வீடியோ, ஆபாச படங்களை காட்டினார். உடனே, கோர்ட்டு உத்தரவின்பேரில், கடந்த 7ம் தேதி எட்வின் உட்பட 5 பேர் மீது வரதட்சணை கேட்டு மிரட்டல் 498 (ஏ), கொலை செய்வதாக அச்சுறுத்தல் 506(1), ஆபாசமாக படம் பிடித்தல் 506 (2), பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு (உமன் அராஸ்மென்ட் ஆக்ட்) ஆகிய 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

அப்போது கிடைத்த தகவல் வருமாறு: விராலிமலை வங்கியில் எட்வின் ஜெயக்குமார் 4 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். வங்கிக்கு பணம் எடுக்க, செலுத்தும் வரும் பெண்களில் அழகான வாடிக்கையாளர்களின் பாஸ் புத்தகத்தில் உள்ள செல்போன் எண்களை எட்வின் குறித்து வைத்து கொள்வார். பின்னர், இரவு வீட்டுக்கு வந்தபின் அந்த பெண்களின் செல்போன்களுக்கு ஆபாச தகவல்களை எஸ்.எம்.எஸ் மற்றும் வாட்ஸ்அப் மூலம் அனுப்புவார். பதில் வரும் எண்களுக்கு மீண்டும் வாட்ஸ்அப்பில் பெண்களை மயக்கும் வகையில் பதில் அனுப்புவாராம். இதில் வலையில் விழும் பெண்களிடம் போனில் பேசி நட்பை விரிவுப்படுத்தி கொண்டு கடைசியில் அவர்களை வலையில் விழ வைப்பார். இப்படிதான் பல பெண்களை தனது வழிக்கு வரவழைத்தது தெரியவந்துள்ளது. தற்போது, மனைவி புகார் அளித்ததால் எட்வின் வேலைக்கு செல்லவில்லை. இதேபோல் எட்வின் லீலைகளுக்கு உடந்தையாக செயல்பட்ட கள்ளக்காதலியும் சக ஊழியரான தேவிபிலோமினாவும் வேலைக்கு வரவில்லை. இவ்வாறு தெரியவந்தது.

இதன்பின், மேலாளரிடம் விசாரித்தபோது, ‘கடந்த 2 வாரமாக வங்கிக்கு எட்வின் வரவில்லை.  இதுகுறித்து மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டோம். அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். விரைவில் அவர் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார். இதையடுத்து தாட்சரிடம் விசாரித்தபோது, ‘எட்வினின் லீலைகள் அடங்கிய 15 செல்போன்களில் ஒன்றில், ஒரு பெண் இறந்து கிடப்பது போலவும், அருகில் எட்வின் நின்று கொண்டிருக்கும்  நிலையில் கால் தெரிவது போலவும் புகைப்படம் இருந்தது. இதனால் அந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்’ என்று தெரிவித்துள்ளார். எட்வினின் லீலைகளை அறிந்து சக அலுவலர்கள், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனினும், தலைமறைவான எட்வின் குடும்பத்தினரை போலீசார் தேடி வருகின்றனர்.

வரதட்சணை கொடுமை

தாட்சர் திருமணத்துக்காக அவரது பெற்றோர் சீர்வரிசையாக 25 பவுன் நகை, ரூ.5 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை எட்வின் ஜெயக்குமாருக்கு கொடுத்தனர். மேலும் ரூ.6 லட்சம் செலவு செய்து திருமணத்தையும் நடத்தி வைத்தனர். ஆனால், தனது மகன் வங்கியில் கேசியர் வேலை பார்ப்பதால் பெரிய இடங்களில் எல்லாம் பெண் கொடுக்க முன் வருகின்றனர். எனவே மேலும் 50 பவுன் நகையை உன் வீட்டில் வாங்கி கொடு என தாட்சரை அவரது மாமியாரும், நாத்தனாரும் சேர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

கர்ப்பம் கலைப்பு

வங்கிக்கு வரும் பெண்கள் மற்றும் வேலை பார்க்கும் பெண்களை அவர்களுக்கு தெரியாமல் ஆபாசமாக புகைப்படங்கள் எடுத்து வைத்துள்ளார். இதற்கு ஊழியர் தேவிபிலோமினா உதவி செய்துள்ளார். இந்த பட்டியலில் பல பெயர்கள் இடம் பெற்றுள்ளது.  இதில் ஒருவர் கர்ப்பமாகியுள்ளார். இதையறிந்த எட்வின், கட்டாயப்படுத்தி கர்ப்பத்தை கலைக்க வைத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது

‘பளார்’ அறை விட்ட பெண்ணின் கணவர்

காமக்கொடூரன் எட்வினுடன் பழகிய பெண்கள் அனைவரும் திருமணமாகி குடும்பத்துடன் உள்ளனர். 8 மாதங்களுக்கு முன் விராலிமலை அருகே உள்ள ஒரு பெண்ணுக்கு இரவு நேரத்தில் செக்ஸ் டார்ச்சர் செய்ய செல்போனில் தொடர்பு கொண்டபோது அவரது கணவர் எடுத்து பேசினார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதால் விராலிமலை காவல் நிலையத்தில் பெண்ணின் கணவர் புகார் செய்தார். அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இதேபோல் மணப்பாறையில் ஒரு பெண்ணுக்கு செல்போனில் செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார். இதையடுத்து, எட்வினை விராலிமலையில் அந்த பெண்ணின் கணவர் தாக்கி உள்ளார்.

Related Stories: