×

திருச்சி ஏர்போர்ட்டில் 16 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி: திருச்சி ஏர்போர்ட்டில் 16 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. ராமநாதபுரம் வாலிபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிங்கப்பூரில் இருந்து இன்டிகோ விமானம் நேற்றுமுன்தினம் இரவு திருச்சி விமான நிலையம் வந்தது. இதில் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு சிஏயு பிரிவினர் சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது ராமநாதபுரத்தை சேர்ந்த கார்த்திகேய ராஜா (32) என்பவர் தனது  பேஸ்ட் வடிவில் 16 லட்சம் மதிப்புள்ள 587 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. அதை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Trichy airport ,Trichy , 16 lakh smuggled gold seized ,Trichy airport
× RELATED தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு 584 உயர்வு