கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு தொடக்கம் : காணொலி காட்சி மூலம் முதல்வர் துவக்கி வைத்தார்

திருப்புவனம்: கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த 2015ல் அகழாய்வு பணி தொடங்கியது.  மத்திய, மாநில தொல்லியல் துறையினர் ஐந்து கட்டங்களாக அகழாய்வு நடத்தினர். இதில் பண்டைய தமிழர்களின் நெசவு தொழில், கட்டிடக்கலை, கால்நடை வளர்ப்பு, நீர் மேலாண்மை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன. இவை 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என கண்டறியப்பட்டது.

ஆறாம் கட்ட அகழாய்வுப்பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ேநற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து கொந்தகை, மணலூர், அகரத்தில் அடுத்த வாரம் அகழாய்வு பணிகள் துவங்க உள்ளது. நான்கு இடங்களில் நடக்கும் அகழாய்வுக்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் ஒதுக்கியுள்ளது. கீழடியில் இம்மாதம் முழுவதும் நீதியம்மாள் நிலத்தில் நான்கு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெறுகிறது. 100க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள், தொல்லியல் துறை மாணவர்கள் அகழாய்வு பணியில் ஈடுபட உள்ளனர்.

Related Stories: