×

3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் டிரால் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  நேற்று முன்தினம் இரவு முதல் பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  அப்போது, அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். பதிலுக்கு பாதுகாப்பு படை  வீரர்கள் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தீவிரவாதிகள் யார்? எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என விசாரிக்கப்பட்டு வருகிறது.


Tags : terrorists , 3 terrorists, shot dead
× RELATED ஏப்ரல்.3-ம் தேதியான வெள்ளிக்கிழமை...